ரோகித்திடம் பழைய கணக்கை தீர்க்க தயாராகும் பாண்டியா! கொளுத்தி போட்ட ஸ்டார்போர்ட்ஸ்

கேப்டன்சி விவகாரத்தில் ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இடையே புகைச்சல் உருவாகியிருக்கும் சூழலில் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் புதிய வெடியை கொளுத்திபோட்டுள்ளது

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 26, 2022, 02:28 PM IST
  • இலங்கை தொடருக்கான இந்திய அணி
  • ஹர்திக் பாண்டியா பெயர் பரிசீலனை
  • அதிருப்தியில் கேப்டன் ரோகித் சர்மா
ரோகித்திடம் பழைய கணக்கை தீர்க்க தயாராகும் பாண்டியா! கொளுத்தி போட்ட ஸ்டார்போர்ட்ஸ் title=

இந்திய அணி அடுத்தாக இலங்கை தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், பிசிசிஐ இதுவரை இலங்கை அணிக்கு எதிரான விளையாடும் இந்திய அணியை அறிவிக்கவில்லை.20 ஓவர் அணிக்கு ஒரு கேப்டனும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கு ஒரு கேப்டனுக்கும் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஹர்திக் பாண்டியாவுக்கு 20 ஓவர் அணி தலைமை பொறுப்பும், மற்ற இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமை வகிக்கட்டும் என பிசிசிஐ உயர் அதிகாரிகள் விவாதித்தாகவும் கூறப்படுகிறது. 

ரோகித் சர்மா அதிருப்தி

இந்த விவகாரத்தில் ரோகித் சர்மா அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இவரது தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் உலக கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக படுதோல்வி அடைந்துவிட்டதால், அப்போது முதல் பிசிசிஐ ரோகித் சர்மா மீதான நம்பிக்கையை இழந்துவிட்டது. அதனால், அதன்பிறகு நடைபெற்ற 20 ஓவர் தொடர்களுக்கு ஹர்திக் பாண்டியா மட்டுமே கேப்டனாக நியமிகப்பட்டு வருகிறார். இதே ஃபார்முலாவை இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் கடைபிடிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

மேலும் படிக்க | அம்மாடியோ! இத்தனை போட்டிகளா? 2023ல் இந்திய அணி விளையாடும் தொடர்கள்!

பாண்டியாவின் பழைய கணக்கு

ஹர்திக் பாண்டியாவை பொறுத்தவரை ஒரு கேப்டனாக தன்னை நிரூபித்துவிட்டார். ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு தலைமை தாங்கிய அவர், அறிமுக தொடரிலேயே கோப்பையை வென்று கொடுத்து அசத்தினார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக விரும்புவதாக ஹர்திக் பாண்டியா தெரிவித்ததால், அவரை அந்த அணி நிர்வாகம் கழற்றிவிட்டது. இது தொடர்பாக ரோகித் சர்மாவுக்கும் பாண்டியாவுக்கும் இடையே ஏற்கனவே புகைச்சல் இருந்து வந்தது. இப்போது அது இந்திய அணியிலும் எதிரொலிக்க தொடங்கியிருக்கிறது.

பிசிசிஐ அதிரடி முடிவு

ரோகித் சர்மாவின் வயது அடிப்படையில் அவரை 20 ஓவர் தொடருக்கு கேப்டனாக நியமிக்க பிசிசிஐ தயங்குகிறது. அவர் 35 வயதை நெருங்கிவிட்டதால் இளம் வீரர் ஒருவர் 20 ஓவர் இந்திய அணியின் கேப்டனாக இருக்க வேண்டும் என விரும்பும் பிசிசிஐ, புதிதாக ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஹர்திக் பாண்டியா பெயரை டிக் அடித்துள்ளது. 

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வீடியோ

இந்த நேரத்தில் தான் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்திய அணிக்குள் புதிய வெடி ஒன்றை கொளுத்தி போட்டுள்ளது. இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படாத சூழலில் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை முன்னிறுத்தி தொலைக்காட்சியில் புரோமோ வீடியோவை வெளியிட்டது. இதற்கு விமர்சனம் எழுந்ததால், அந்த புரோமோவையும் நிறுத்தியுள்ளது. அதனால், இலங்கை தொடருக்கு யார் தலைமையில் இந்திய அணி களமிறங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

மேலும் படிக்க | IND vs SL: முக்கிய வீரரை கழட்டிவிட பிசிசிஐ முடிவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News