SL vs IND ODI Squad Latest News Updates: நடந்து முடிந்த ஐசிசி டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா இந்திய கிரிக்கெட் அணி வென்று 17 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டத்தை வென்றது. சாம்பியன் பட்டத்தை வென்ற கையோடு ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால் இந்திய ரசிகர்கள் சற்று கவலை அடைந்தாலும் அடுத்தாண்டில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என இரண்டு ஐசிசி கோப்பைகளை கைப்பற்றும் வாய்ப்பு இந்திய அணிக்கு அதிகமாக இருப்பதால் அதை நோக்கி இப்போதே காத்திருக்க தொடங்கிவிட்டனர்.


2 ஐசிசி கோப்பைகள்


அந்த இரண்டு ஐசிசி தொடர்களுக்கும் ரோஹித் சர்மாவே (Rohit Sharma) கேப்டனாக நீடிப்பார் என சமீபத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்திருந்த நிலையில், ரசிகர்கள் நிம்மதி அடைந்திருக்கின்றனர்.  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு (World Test Championship) இந்திய அணி தகுதிபெறும்பட்சத்தில் ரோஹித் சர்மாவுக்கு அதுவே கடைசி ஆட்டமாகவும் இருக்கலாம். சாம்பியன்ஸ் டிராபியுடன் (Champions Trophy) அவர் ஓடிஐ அரங்கிலும் தனது ஓய்வை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி 2027 ஐசிசி உலகக் கோப்பை வரை விளையாட வேண்டும் என ரசிகர்கள் விரும்பினாலும் அதற்கான பதில் அவரிடமே உள்ளது எனலாம்.


இலங்கை சுற்றுப்பயணம்


அந்த வகையில், இந்த இடைப்பட்ட காலத்தில் இந்திய அணி (Indian Cricket Team) பல்வேறு தொடர்களில் விளையாட உள்ளது, பல்வேறு நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. தற்போது இந்திய இளம் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி வரும் நிலையில், இந்த ஜூலை மாத இறுதியில் இலங்கைக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. குறிப்பாக இந்த தொடர் ஜூலை 27ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.


மேலும் படிக்க | வந்தாச்சு இந்த 3 பேர்... இந்திய அணி பிளேயிங் லெவனில் மாற்றம் உறுதி - யாருக்கு பதில் யாருக்கு வாய்ப்பு?


விராட், ரோஹித்துக்கு ஓய்வு?


இந்நிலையில், இலங்கைக்கு எதிரான ஓடிஐ தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி (Virat Kohli) ஆகிய இருவருக்கு ஓய்வளிக்கப்பட இருப்பதாகவும், சீனியர் வீரர்களான இருவரில் ஒருவருக்கு கேப்டன்ஸி வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுமட்டுமின்றி டி20 மற்றும் ஓடிஐ ஆகிய இரண்டு தொடர்களில் இருந்து பும்ராவுக்கு (Jasprit Bumrah) ஓய்வு வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 


இவர்கள் மூவரும் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஓய்வின்றி விளையாடி வருவதாலும் அவர்களின் வேலைப்பளூவை குறைக்கும் நோக்கிலும் இலங்கை சுற்றுப்பயணத்தில் அவர்களுக்கு ஓய்வளிக்க பிசிசிஐயும், தேர்வுக்குழுவும் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் ரோஹித் சர்மா மட்டும் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக விளையாடி வருகிறார் எனலாம்.


ஓய்வில்லாமல் விளையாடிய ரோஹித்


டிசம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடங்கி டி20 உலகக் கோப்பை வரை தொடர்ச்சியாக விளையாடி உள்ளார். பும்ராவும் ஏறத்தாழ அதேதான். விராட் கோலி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடாவிட்டாலும் ஐபிஎல் தொடரில் இருந்து தொடர்ந்து விளையாடி வருகிறார். எனவே, அடுத்தடுத்து வர உள்ள டெஸ்ட் தொடர்களை கருத்தில் கொண்டு இந்த முடிவை இந்திய அணியின் தேர்வுக்குழு எடுத்திருப்பதாக தெரிகிறது.


டெஸ்டில் மட்டும் கவனம்...


இதுகுறித்து பெயர் சொல்ல விரும்பாத பிசிசிஐக்கு நெருக்கமான ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த தகவலின்படி,"ஒருநாள் போட்டி என வந்துவிட்டால் ரோஹித்தையும், விராட் கோலியையும் தவிர்க்க இயலாது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஓடிஐ தொடரே அவர்களின் பயிற்சிக்கு போதுமானது எனலாம். 


அடுத்து சில மாதங்களில் இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே அதிக கவனத்தை செலுத்த இருக்கின்றனர். இந்திய வரும் செப்டம்பரில் இருந்து அடுத்தாண்டு ஜனவரி வரை மட்டும் 10 டெஸ்ட்களில் விளையாட உள்ளது. மேலும், சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி மாதத்தின் மத்தியிலேயே தொடங்க இருப்பதால் தற்போதைய இலங்கை சுற்றுப்பயணத்திற்கு இவர்கள் செல்ல தேவையில்லை எனலாம். அவர்கள் விருப்பம் தெரிவித்தால் நிச்சயம் விளையாடுவார்கள், ஆனால் அவர்கள் ஓய்வையே விரும்புவார்கள் என நினைக்கிறேன்" என்றார்.


கேப்டன்ஸி யாருக்கு?


இந்திய அணி (Team India) வரும் செப்டம்பரில் வங்கதேசத்துடன் 2 டெஸ்ட்களிலும், நியூசிலாந்து 3 டெஸ்ட்களிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து டெஸ்ட்களிலும் விளையாட உள்ளது. இதில் வங்கதேசமும், நியூசிலாந்தும் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். இந்திய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை தக்கவைக்க ஆஸ்திரேலியாவுக்கு நவம்பர் - டிசம்பரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். தற்போது இலங்கை அணிக்கு எதிரான ஓடிஐ தொடரில் ஹர்திக் பாண்டியா அல்லது கேஎல் ராகுல் ஆகியோரில் ஒருவர் கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ளது.  


மேலும் படிக்க | ஒருபோட்டியில் கூட விளையாடாமல் கோடி கணக்கில் சம்பாதித்த ரிங்கு சிங்! எப்படி தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ