IPL 2025 Latest News In Tamil: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) ஐபிஎல் லீக்கில் ஒரு தன்னிகரற்ற அணியாக விளங்குகிறது. 2008ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை தோனி தலைமையில் 5 முறை ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே தட்டித்தூக்கி உள்ளது. 2 முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் தோனி தலைமையில் சிஎஸ்கே வென்றுள்ளது. ஐபிஎல் தொடரில் 13 முறை பிளே ஆப் வந்த சிஎஸ்கே அணி மொத்தம் 10 முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிஎஸ்கே இந்தளவிற்கு வெற்றிகரமான அணியாக திகழ்வதற்கு எம்எஸ் தோனி, ஸ்டீபன் ஃபிளெமிங் கூட்டணியை முக்கிய காரணமாக சொல்லலாம். 2009இல் இருந்து இந்த கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதேபோல், சிஎஸ்கே நிர்வாகமும் தோனி (MS Dhoni) என்ன முடிவெடுத்தாலும் அதற்கு ஆதரவாக செயல்படுவதாலும், தோனிக்கு முழு சுதந்திரத்தையும் அளிப்பதாலும்தான் வெற்றிகரமான அணியாக இன்றளவும் தொடர முடிகிறது. 


Uncapped வீரராக தோனி?


அந்த வகையில், ஐபிஎல் தொடரில் இருந்து தோனி விரைவில் ஓய்வை அறிவிப்பார் என கூறப்படுகிறது. இருப்பினும் அவர் 2025 ஐபிஎல் சீசனில் (IPL 2025) விளையாடுவாரா மாட்டாரா என்பது ஐபிஎல் நிர்வாகத்தின் கைகளிலேயே இருக்கிறது. மெகா ஏலத்தில் (IPL Mega Auction) எத்தனை வீரர்களை தக்கவைக்கலாம் என்பது உறுதியான உடன் தோனி அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா மாட்டாரா என்பது உறுதியாகிவிடும். 


மேலும் படிக்க | CSK: சிஎஸ்கேவுக்கு ரிஷப் பண்ட் வந்தால்... நன்மை என்ன? பிரச்னை என்ன?


அதுமட்டுமின்றி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 3-5 ஆண்டுகள் ஆன வீரர்களை Uncapped வீரர்கள் பட்டியலில் சேர்க்கும் விதியையும் ஐபிஎல் நிர்வாகம் கொண்டு வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விதி தோனி Uncapped வீரராக வருவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி தரும், மேலும் தோனிக்கு பெரிய தொகையை சிஎஸ்கே ஒதுக்க வேண்டிய அவசியமும் ஏற்படாது.


சிஎஸ்கேவில் ரிஷப் பண்ட்?


தோனி விளையாடினால் நிச்சயம் 2025ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன்தான் கடைசி தொடராக இருக்கும். எனவே, 2025 சீசனுக்கு பலம் வாய்ந்த அணியை கட்டமைத்து ஐபிஎல் கோப்பையை மீண்டும் ஒருமுறை வெல்லும் முனைப்பில் சிஎஸ்கே செயல்படுகிறது. இதனால், முடிந்தவரை தற்போதை கோர் அணியை தக்கவைப்பதன் மூலமும், மெகா ஏலத்தில் அணிக்கு தேவையான வீரர்களை அளவான தொகையில் எடுப்பதன் மூலமும் தங்களது திட்டத்தை சிஎஸ்கே நிறைவேற்ற நினைக்கும். அப்படியிருக்க தோனி போல் ஒரு நட்சத்திரம் வெளியேறும்போது இந்திய அணியில் தற்போது நட்சத்திரமாக விளங்கும் ஒரு வீரரை அணிக்குள் கொண்டுவர வேண்டும் என்பதும் சிஎஸ்கேவின் முக்கிய வியூகமாக இருக்கிறது.


அதில், தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ரிஷப் பண்டை (Rishabh Pant), சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகபட்ச தொகைக்கு டிரேட் செய்ய இருப்பதாக சில நாள்கள் முன் தகவல்கள் வெளியாகின. இந்த டிரேட் உண்மையாக நடக்கும்பட்சத்தில் சிஎஸ்கேவின் அதிக வருமானம் பெரும் வீரராக ரிஷப் பண்ட் இருப்பார் என கூறப்பட்டது. ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்ஸியில் சிறப்பாக செயல்பட்டாலும் அந்த நட்சத்திர அந்தஸ்து ரிஷப் பண்டிடமே இருக்கிறது என்பதால் ரிஷப் பண்டை கேப்டனாக்குவது குறித்தும் சிஎஸ்கே திட்டமிட்டு வருகிறது என கூறப்பட்டது. 


ரிஷப் பண்ட் சொன்ன அந்த வார்த்தை...


எனினும், இது ஒரு வதந்தியாகவே பார்க்கப்பட்டது. ரிஷப் பண்ட் சிஎஸ்கேவுக்கு வர வாய்ப்பே இல்லை என கூறப்பட்டது. இந்நிலையில், ரிஷப் பண்ட் நேற்று அவரது X பக்கத்தில் போட்ட பதிவு அவர் சிஎஸ்கேவுக்கு வருகிறாரோ என்ற எண்ணத்தை வலுபடுத்தி உள்ளது. அவரது X பதிவில், கபாலி படத்தில் ரஜினிகாந்த் போல் ரிஷப் பண்டும் போஸ் கொடுத்து, தனது புகைப்படத்தையும் ரஜினிகாந்த புகைப்படத்தையும் பதிவிட்டு,"தலைவா" (Thalaiva) என ரஜினியை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். 



2016இல் கபாலி திரைப்படம் வெளியான சமயத்தில் தோனியும் இதேபோல் போஸ் கொடுத்த புகைப்படம் மிகவும் பிரபலமானது. அதேபோல் தற்போது ரிஷப் பண்டும் போஸ் கொடுத்து புகைப்படத்தை பதிவிட்டிருப்பது அவர் சிஎஸ்கேவுக்கு வருவதற்கான அறிகுறியோ என ரசிகர்கள் கிசுகிசுத்து வருகின்றனர். எனினும் இதுவும் அதிகாரப்பூர்வமாக உறுதியாகவில்லை. 


மேலும் படிக்க | ரிஷப் பந்த் இல்லை! ஏலத்தில் சிஎஸ்கே குறிவைக்கும் விக்கெட் கீப்பர் இவர் தான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ