சிஎஸ்கே வருகிறார் ரிஷப் பண்ட்... தோனிக்கு மாற்று கிடைச்சாச்சு - குஷியில் ரசிகர்கள்

டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட், ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன் அந்த அணியில் இருந்து வெளியேறி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
  • Jul 20, 2024, 15:44 PM IST

Rishabh Pant CSK: டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட், ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன் அந்த அணியில் இருந்து வெளியேறி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Rishabh Pant CSK: ஐபிஎல் 2025 மெகா ஏலம் (IPL 2025 Mega Auction) நடைபெறுவதற்கு முன் இந்த டிரெடிங் நடைபெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

1 /8

ஐபிஎல் 2025 தொடருக்கு (IPL 2025) முன் இந்தாண்டின் இறுதியிலோ அல்லது அடுத்தாண்டின் தொடக்கத்திலேயோ மெகா ஏலம் நடத்தப்பட உள்ளது. எனவே, 10 அணிகளிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட இருக்கின்றன.   

2 /8

ஐபிஎல் ஏலத்திற்கு முன் எத்தனை வீரர்களை ஒரு அணி தக்கவைக்கலாம் என்பது குறித்த விவரங்கள் ஏதும் இன்னும் தெளிவாகவில்லை. கடந்த கால விதிமுறைகளின்படி, மூன்று இந்தியர் - 1 வெளிநாட்டவர் அல்லது இரண்டு இந்தியர் - 2 வெளிநாட்டவர் ஆகியோரை தக்கவைக்கலாம்.   

3 /8

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை (IPL 2025 Mega Auction) முன்னிட்டு அதன் விதிமுறைகளும், பிற விவரங்களும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். ஐபிஎல் அணிகளும், ஐபிஎல் நிர்வாகமும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.   

4 /8

இது ஒருபுறம் இருக்க, டெல்லி கேப்பிடல்ஸ் (Delhi Capitals) அணியின் தற்போதைய கேப்டன் ரிஷப் பண்ட் (Rishabh Pant) வரும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன் அந்த அணியில் இருந்து வெளியேற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.    

5 /8

அவர் டெல்லியில் இருந்து ஐந்து முறை சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லி அணிக்கு புதிய தலைமை வேண்டும் என அணி உரிமையாளர்கள் என விரும்புவதால் ரிஷப் பண்ட் வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது.   

6 /8

டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் கடந்த 7 ஆண்டுகளாக தலைமை பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங் பதவி விலகியதை தொடர்ந்து, சௌரவ் கங்குலிக்கு அந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. ரிஷப் பண்டை தக்கவைக்க கங்குலி விரும்புவதாகவும், ஆனால் அதனை மறுத்த அணி உரிமையாளர்கள் பண்டை டிரேட் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

7 /8

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை பல கோடி ரூபாய் கொடுத்தும் டிரேட் செய்ய தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விக்கெட் கீப்பர் பேட்டரான தோனி (MS Dhoni Replacement) அடுத்த சீசனில் விளையாட மாட்டார் என கூறப்படும் நிலையில், அவரின் வெற்றிடத்தை ரிஷப் பண்ட் கண்டிப்பாக நிரப்புவார் எனலாம்.   

8 /8

இருப்பினும், கடந்த 2024 சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே கேப்டனாக செயலாற்றிய நிலையில், ரிஷப் பண்ட் சிஎஸ்கே வந்தால் கேப்டன்ஸி யாருக்கு என்ற பேச்சும் அடிப்படும். ஆனாலும், சிஎஸ்கேவுக்கு வரும்பட்சத்தில் ரிஷப் பண்டுக்கே கேப்டன்ஸி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.