CSK: சிஎஸ்கேவுக்கு ரிஷப் பண்ட் வந்தால்... நன்மை என்ன? பிரச்னை என்ன?

Rishabh Pant: ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து, சென்னை அணிக்கு மாற இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் சிஎஸ்கேவுக்கு (CSK) வந்தால் அந்த அணிக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jul 21, 2024, 09:39 AM IST
  • ஐபிஎல் 2025 தொடருக்கு முன் மெகா ஏலம் நடைபெறும்.
  • ரிஷப் பண்ட் டெல்லி அணியால் தக்கவைக்கப்படுவாரா என்ற பெரும் கேள்வி உள்ளது.
  • சென்னை அணியில் தோனி ஓய்வு பெற இருக்கிறார் எனலாம்.
CSK: சிஎஸ்கேவுக்கு ரிஷப் பண்ட் வந்தால்... நன்மை என்ன? பிரச்னை என்ன? title=

Rishabh Pant Chennai Super Kings: இந்திய கிரிக்கெட் அணி (Team India) இப்போதுதான் ஐசிசி டி20 உலகக் கோப்பையை முடித்துவிட்டு அதன் அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறது. அடுத்தடுத்து டி20, ஓடிஐ மற்றும் டெஸ்ட் தொடர்களில் இந்தியா விளையாட உள்ளது. முன்னணி வீரர்கள் முதல் இளம் வீரர்கள் வரை கோப்பைகளை வேட்டையாட தயாராகி வருகின்றனர்.

வரும் நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு பார்டர் - கவாஸ்கர் கோப்பையை விளையாட இருக்கிறது. 5 போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவுடன் மோதி, அந்த கோப்பையை தக்கவைக்க இந்திய அணி இப்போதிருந்த திட்டம் வகுத்து வருகிறது. நீண்ட ஆண்டுகளுக்கு பின் சாம்பியன்ஸ் டிராபி தொடரும் அடுத்தாண்டு பிப்ரவரியில் நடைபெற இருக்கிறது. அதற்கும் இந்திய அணி தன்னை தயார்படுத்தி வருகிறது.

ஐபிஎல் மெகா ஏலம் 2025

இப்படி இந்திய அணிக்கு பல்வேறு எதிர்கால இலக்குகள் இருந்துவரும் வேளையிலும், ஐபிஎல் 2025 தொடர் (IPL 2025) மீண்டும் பேசுபொருளாகி உள்ளது. இந்த ஐபிஎல் தொடருக்கு முன் மெகா ஏலம் நடைபெற இருப்பதால்தான் எதிர்பார்ப்புகள் அதிகமாகியிருக்கிறது. ஐபிஎல் மெகா ஏலம் (IPL Mega Auction 2025) எப்போது நடைபெறும் என்பது இன்னும் உறுதியாகவில்லை, அதேபோல், ஏலத்திற்கு முன் அணிகள் எத்தனை வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் (IPL Players Retention) என்ற விதிமுறையும் இன்னும் உறுதியாகவில்லை எனலாம்.

மேலும் படிக்க | இதற்காகத்தான் ஹர்திக் பாண்டியா கேப்டன் பதவியில் இருந்து நீக்கமா?

இதை தொடர்ந்து, ஐபிஎல் ஏலத்தின் நடைமுறைகள் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து இம்மாத இறுதியில் அணிகளின் உரிமையாளர்களுடன் ஐபிஎல் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம், ஒரு அணி எத்தனை வீரர்களை தக்கவைக்கலாம் போன்ற விதிமுறைகள் உறுதியாகிவிட்டால் தற்போது இருக்கும் எதிர்பார்ப்பும் டபுளாகிவிடும். கடந்தாண்டு ஹர்திக் பாண்டியா டிரேட் போல் இந்த முறையும் ஏதும் திருப்பம் இருக்குமா என்ற கேள்வியும் தற்போது அனைவரிடத்திலும் உள்ளன.

பரபரப்பு தகவல்கள்

அந்த வகையில், நேற்று ஐபிஎல் 2025 தொடர் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகின. மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணியில் ரோஹித், சூர்யகுமார் ஆகியோர் விளையாடுவது குறித்தும், மும்பை யாரை தக்கவைக்கும் என்பது குறித்தும் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வந்தது. அதேபோல், லக்னோ அணியில் இருந்து கேஎல் ராகுல் விடுபட இருப்பதாகவும், அவர் மீண்டும் தனது தாய் அணியான ஆர்சிபிக்கே (Royal Challengers Bangalore) திரும்ப இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சிஎஸ்கேவில் ரிஷப் பண்ட்?

இவற்றை மிஞ்சும் அளவிற்கு மற்றொரு பரபரப்பு தகவலும் நேற்று வந்தது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக உள்ள ரிஷப் பண்ட், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைய இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன. இது சமூக வலைதலங்களில் கிரிக்கெட் ரசிகர்களிடத்தில் அதிகம் பேசப்பட்டது. ஒரு சிலரோ ரிஷப் பண்ட் சிஎஸ்கே வர வாய்ப்பே இல்லை எனவும் டெல்லி அணியின் முகமாக இருந்த அவரை அந்த அணி விடுவிக்காது எனவும் இந்த தகவல்களை நிராகரித்து பேசினர்.

zeenews.india.com/tamil/photo-gallery/big-surprise-rishabh-pant-will-join-chennai-super-kings-after-leaving-delhi-capitals-ahead-of-ipl-2025-mega-auction-ms-dhoni-replacement-516925

பெரும்பாலான சிஎஸ்கே ரசிகர்களோ ரிஷப் பண்டை தோனியின் சிறந்த மாற்றாக பார்த்தாலும், இன்னும் சிலரோ ருதுராஜ் கேப்டனாக இருப்பதால் ரிஷப் பண்ட் (Rishabh Pant) சிஎஸ்கேவுக்கு வருவது மேலும் சிக்கலையே உருவாக்கும் எனவும் வாதிட்டு வருகின்றனர். ரிஷப் பண்ட் வருவாரா மாட்டாரா, அதற்கான சாத்தியக்கூறுகள் எந்தளவிற்கு இருக்கிறது என எதுவுமே தெளிவாக தெரியாத சூழலிலும் இதுகுறித்த பேச்சுகள் தீவிரமடைந்திருப்பதை பார்க்க முடிகிறது. 

சிஎஸ்கேவுக்கு என்ன நன்மை?

இந்நிலையில், ஒருவேளை ரிஷப் பண்ட் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்கு வரும்பட்சத்தில் அந்த அணிக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இதில் காணலாம். சிஎஸ்கே அணிக்கு ஓப்பனிங்கில் எப்போதுமே பிரச்னை இருக்காது. 2021, 2023 ஆகிய இரண்டு முறை கோப்பையை வென்றாலும் அந்த அணிக்கு மிடில் ஆர்டரில்தான் கடந்த சில ஆண்டுகளாக தொய்வு இருக்கிறது எனலாம். 

மிடில் ஆர்டரில் ரெய்னா, அம்பதி ராயுடு போல் பலமான இந்திய வீரர்கள் கிடைப்பது அரிது. எனவே, ரிஷப் பண்ட் வந்தால் அவர் சிஎஸ்கேவின் மிடில் ஆர்டரை பார்த்துக்கொள்வார். பவர் பிளேவுக்கு பிந்தைய ஓவர்கள் முதல் டெத் ஓவர்களுக்கு முன்பு வரை ஆட்டத்தை தன்பக்கம் வைத்திருப்பதில் ரிஷப் பண்ட் கில்லாடி. மிடில் ஓவர்களின் மன்னனாக திகழும் இவரை சிஎஸ்கேவுக்கு வந்தால் நிச்சயம் பலன் இருக்கும்தான்.

ரிஷப் பண்ட் கேப்டன்ஸியை கேட்கிறாரா இல்லையா என்பது ஒருபுறம் இருந்தாலும், அவரின் அனுபவம் சிஎஸ்கே அணிக்கு மேலும் உதவிக்கரமாக இருக்கும். ருதுராஜ் (Ruturaj Gaikwad) உடன் கைக்கோர்த்து நின்றாலும் சரி, கேப்டன்ஸி பண்டுக்கு கொடுக்கப்பட்டாலும் சரி அது ஆரோக்கியமான மாற்றமாக இருக்கும்பட்சத்தில் பிரச்னை இருக்காது. கூடவே, தோனியும் (MS Dhoni) ஓய்வு பெற்றுவிட்டால் ஒரு இந்திய விக்கெட் கீப்பர் பேட்டராக ரிஷப் பண்ட் வருவார். அவர் விட்டுச்செல்லும் அந்த இடத்தில் ஒரு கேப்டனா, ஒரு பேட்டராக, அணியை தூண் போல் தாங்கக் கூடிய ஒருவராக ரிஷப் பண்ட் திகழ்வார் என்பதில் எந்த சந்தேகமும் பட தேவையில்லை.

மேலும் படிக்க | ஹர்திக்கை பிரிஞ்சதும் ஹேப்பி மோடில் நடாஷா - செர்பியாவில் முதல் வேலையா என்ன செய்தார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News