கேகேஆர் அணிக்கு இருக்கும் அதிர்ஷ்டங்கள்.. ஐபிஎல் கோப்பை இந்த அணிக்குதான் - ஏன் தெரியுமா?
Kolkata Knight Riders: 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், இந்த ஆண்டு அந்த அணி கோப்பையை வெல்லவே 90% வாய்ப்புள்ளது எனலாம். இதுசார்ந்த புள்ளிவிவரங்களை இங்கு காணலாம்.
Kolkata Knight Riders: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது மே 19ஆம் தேதியுடன் லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்தன. லீக் சுற்று முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன.
அதை தொடர்ந்து, நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டிக்கான முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் (Qualifier 1) கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நான்காவது முறையாக ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
கௌதம் கம்பீர் ராசி
2012, 2014, 2021 உள்ளிட்ட சீசன்களுக்கு பின் இந்த முறையும் கொல்கத்தா அணி (Kolkata Knight Riders) இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது. அதிலும் குறிப்பாக, கோப்பைகளை வென்ற 2012 மற்றும் 2014 ஆகிய இரண்டு சீசன்களிலும் கௌதம் கம்பீர் தலைமையில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து குவாலிஃபயர் 1 போட்டியில் வெற்று பெற்று இறுதிப்போட்டிக்கு சென்று இங்கு நினைவுக்கூரத்தக்கது.
மேலும் படிக்க | இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி.. MS Dhoni-ஐ விட யார் சிறந்தவர் -BCCI திட்டம்
அந்த வகையில், தற்போது கௌதம் கம்பீர் (Gautam Gambhir) ஆலோசகராக உள்ள நிலையில், அதேபோன்று குவாலிஃபயர் 1 போட்டியிலும் வென்று இறுதிப்போட்டிக்கும் சென்றுள்ளது. இதன்மூலம், மூன்றாவது முறையாக கொல்கத்தா அணி ஐபிஎல் கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். கொல்கத்தா அணி இதற்கு முன் 2021ஆம் ஆண்டு எலிமினேட்டரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டி வந்தாலும், அந்த போட்டியில் சிஎஸ்கேவிடம் தோல்வியை தழுவியது.
குவாலிஃபயர் 1 ராசி
இதுமட்டுமின்றி 2018ஆம் ஆம் ஆண்டில் இருந்து 2023ஆம் ஆண்டு சீசன் வரை அதாவது கடந்த 6 ஆண்டுகளாக குவாலிஃபயர் 1 போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குச் சென்ற அணிகளே வெற்றி பெற்றுள்ளன. 2018இல் சிஎஸ்கே, 2019 மற்றும் 2020இல் மும்பை, 2021இல் சென்னை, 2022இல் குஜராத் மற்றும் 2023இல் சென்னை என இந்த அணிகள் அனைத்துமே குவாலிஃபயர் 1 போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குச் சென்றவைதான்.
எனவே, கொல்கத்தாவுக்கு கௌதம் கம்பீரின் ராசியும், குவாலிஃபயர் 1 போட்டியின் ராசியும் கைக்கூடி வரும்பட்சத்தில் நான்காவது கோப்பையை வெல்லும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கொல்கத்தா அணி பேட்டிங்கில் மட்டுமின்றி பந்துவீச்சிலும் சிறப்பாக விளையாடி வருகிறது. மேலும் சென்னை சேப்பாக்கத்தில்தான் 2012இல் கொல்கத்தா அணி கோப்பையை வென்றது, அதேபோன்று இந்தாண்டும் சேப்பாக்கத்தில்தான் இறுதிப்போட்டி (IPL Final 2024) என்பது கேகேஆர் அணி மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது. சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் சேப்பாக்கத்தில் சுழல் ஜாலம் நடத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.
இன்று எலிமினேட்டர்...
இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் (IPL 2024 Eliminator) ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் தோல்வியடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும் நிலையில், வெற்றி பெறும் அணி குவாலிஃபயர் 2 (IPL 2024 Qualifier 2) போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளும். குவாலிஃபயர் போட்டி மே 24ஆம் தேதியும், இறுதிப்போட்டி மே 26ஆம் தேதியும் சென்னையில் நடைபெறுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ