ஐபிஎல் ப்ளேஆஃப் : ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி ஏற்கனவே 2 முறை மோதல் - மூன்றாவது முறை வெற்றி யாருக்கு?

ஐபிஎல் 2024 பிளே ஆஃப் சுற்றில் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மே 22 ஆம் தேதி மோத இருக்கின்றன. இப்போட்டியில் யார் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

Written by - S.Karthikeyan | Last Updated : May 20, 2024, 05:49 PM IST
  • நாளை மறுநாள் ஐபிஎல் 2024 எலிமினேட்டர்
  • ராஜஸ்தான் அணியை எதிர்கொள்ளும் ஆர்சிபி
  • மூன்றாவது முறை வெற்றி பெறப்போவது யார்?
ஐபிஎல் ப்ளேஆஃப் : ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி ஏற்கனவே 2 முறை மோதல் - மூன்றாவது முறை வெற்றி யாருக்கு? title=

ஐபிஎல் 2024 இப்போது லீக் போட்டிகள் முடிந்து பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நடக்க இருக்கிறது. ஐபிஎல் 2024 புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் குவாலிஃபையர் ஒன்று போட்டியிலும், மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் எலிமினேட்டர் ஒன்றிலும் விளையாட இருக்கின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. இந்த இரு அணிகளும் ஐபிஎல் வரலாற்றில் இதற்கு முன் பிளேஆஃப் சுற்றில் நேருக்கு நேர் மோதியுள்ளன என்பதால், மூன்றாவது முறை யார் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

உண்மையில் ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் குவாலிஃபையர் ஒன்றில் விளையாடி இருக்க வேண்டிய அணி. அந்த அணி முதல் 8 போட்டிகளில் 7 வெற்றிகளை பெற்றிருந்தது. ஆனால் இரண்டாம் பாதி ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு சென்றது. ஞாயிற்றுக்கிழமை குவஹாத்தியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ராஜஸ்தான் ராயல்ஸின் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்படாமல், அப்போட்டியில் விளையாடி வெற்றி பெற்றிருந்தால் கூட அந்த அணி முதல் இரு இடங்களைப் பிடித்திருக்கும். மழையால் அந்த வாய்ப்பும் பறிபோனது. தற்போது எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இரண்டாவது தகுதிச் சுற்றுக்குள் நுழையும். 

மேலும் படிக்க | சன்ரைசர்ஸ் அபிஷேக் சர்மாவின் தங்கச்சிக்கு குஜராத் கேப்டன் மீது கிரஷ்ஷாம்!

ராஜஸ்தான் vs பெங்களூரு பிளேஆஃப் வரலாறு

ஐபிஎல் பிளேஆஃப்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இரண்டு முறை மோதியுள்ளன. இரு அணிகளும் தலா ஒரு முறை வெற்றியும், தோல்வியும் பெற்றிருக்கின்றன. 2015ல் முதன்முறையாக RCB மற்றும் RR அணிகள் எலிமினேட்டர் போட்டியில் மோதின. அப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் RCB தோற்கடித்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 180 ரன்கள் எடுத்தது. ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் மன்தீப் சிங் ஆகியோர் அரைசதம் அடித்தனர். பந்துவீச்சில் ஹர்ஷல் படேல், ஸ்ரீநாத் அரவிந்த், டேவிட் வீஸ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 109 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தனர்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராயல்ஸ் பழிவாங்கியது

இதற்குப் பிறகு, ஐபிஎல் 2022 இன் இரண்டாவது தகுதிச் சுற்றில் RCB மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்தி பெங்களூரு இரண்டாவது தகுதிச் சுற்றுக்குள் நுழைந்தது, அதே நேரத்தில் ராயல்ஸ் முதல் தகுதிச் சுற்றில் குஜராத் டைட்டன்ஸிடம் தோற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 157 ரன்கள் எடுத்தது. ரஜத் படிதர் அரைசதம் அடித்தார். ஆனால் ஜோஸ் பட்லர் சதம் அடித்து ஆர்சிபியின் நம்பிக்கையை முறியடித்து ராயல்ஸ் அணிக்கு 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியை தேடித் தந்தார்.

ஐபிஎல் 2024ல் வெற்றி யாருக்கு?

புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, ​​RCB மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான எலிமினேட்டர் போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. RCB ஆனது நான்காவது அணியாக பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.  இரு அணிகளுமே சமபலத்துடன் உள்ள நிலையில், முதல் முறையாக ஐபிஎல் பட்டத்தை வெல்ல ஆர்சிபி அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் இரண்டாவது முறையாக சாம்பியனாவதற்கும் முனைப்புடன் இருப்பதால் இப்போட்டி கடுமையாகவே இருக்கும்.

மேலும் படிக்க | Rohit Sharma : ’தனியுரிமையை பாதிக்கிறது’ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மீது ரோகித் சர்மா அதிருப்தி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News