கிரிக்கெட் (CRICKET) ஒரு மதம்போல் இருக்கும் இந்தியாவில், தேசிய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவாக உள்ளது. ஆனால், அந்த வாய்ப்பு என்பது எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், கோடியில் ஒருவருக்கு மட்டுமே இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கான சூழல் உள்ளது. ஏன், இந்திய அணியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் விளையாடி இருந்தால் கூட, தேசிய அணியில் இடம்பிடிப்பது என்பது சாத்தியமில்லை. அதற்கு சரியான உதாரணம், உமுக்ச் சந்த்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | ஐபிஎல் 2022 போட்டிகள் தள்ளிவைப்பா?


19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் கேப்டனாக இருந்த அவருக்கு, இங்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால், இந்திய கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்த அவர், அமெரிக்கா சென்று அந்நாட்டில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். 2024 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் தேசிய அணிக்காக விளையாடும் வாய்ப்பு அவருக்கு உள்ளது. அவரைப் போலவே, மற்றொரு ஐ.பி.எல் (IPL) பிரபலமான பிபுல் ஷர்மாவும் இந்த முடிவை எடுத்துள்ளார். 2016 ஆம் ஆண்டு ஐ.பி.எல் கோப்பையை வென்ற ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த அவர், பஞ்சாப் கிங்ஸ் அணிக்காவும் விளையாடியுள்ளார். 


ALSO READ | IPL Auction 2022 ஏலத்தில் பண மழையால் மூழ்கவிருக்கும் இந்திய வீரர்கள்


ஆல்ரவுண்டரான அவர், 59 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 126 விக்கெட்டுகளையும், 3012 ரன்களையும் எடுத்துள்ளார். இதுதவிர, சிக்கிம், ஹமாச்சலப் பிரதேச அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். இந்நிலையில், இந்திய கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்துள்ள அமெரிக்கா சென்று, அங்கு விளையாட உள்ளார். இவர்களைத் தவிர ஹர்மீத் சிங், ஸ்மித் படேல் ஆகியோர் ஏற்கனவே அமெரிக்கா அணிக்காக விளையாடி வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR