நடப்பு ஐபிஎல்லில் அனைத்து அணிகளுமே லீக்கின் முக்கால்வாசி போட்டிகளை விளையாடி முடித்துவிட்டன. இதனால் ஐபிஎல் தற்போது சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புள்ளிப் பட்டியலும்கூட சுவாரஸ்யமாக அமைந்துவருகிறது. குறிப்பாக ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடும் அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இம்முறை கடுமையாக சொதப்பியுள்ளன. தொடர் தோல்விகளைச் சந்தித்த இரு அணிகளும் தற்போது புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களில் உள்ளன.


பொதுவாக கேப்டன்களை மையமாக வைத்து ஐபிஎல் போட்டிகளை சிலர் கணிப்பதுண்டு. ஆனால் இம்முறையோ சற்று வித்யாசமாக அமைந்துள்ளது. கேப்டனை மாற்றாத மும்பை அணி கடைசி இடத்தில் உள்ளது. கேப்டனை மாற்றி மாற்றி விளையாட்டுக் காட்டும் சென்னை அணி, கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது. முதன்முறையாக கேப்டனாக பொறுப்பேற்றுள்ள குஜராத் அணி, பலரையும் ஆச்சர்யப்படுத்தும் விதமாக முதலிடத்தில் இருந்துவருகிறது.


                                                            


முதன்முறையாகக் கேப்டன் ஆகியுள்ள பஞ்சாப் அணி சரி பாதி வெற்றி-தோல்வியுடன் பட்டியலின் நடுவில் உள்ளது. அதேபோல வேறொரு அணியிலிருந்து புதிய அணிக்குத் தாவி கேப்டனாகியுள்ள பெங்களூர் அணியும், இப்பட்டியலில் நடுவில் இருக்கிறது. இப்படியாக, கேப்டன்களை வைத்து எதையும் முன்கூட்டியே கணிக்க முடியாத ஒரு தொடராக நடப்பு ஐபிஎல் இருந்துவருகிறது.


 


அந்த வகையில், ஓர் அணி வலுவாக இருக்கும் பட்சத்தில் கேப்டன்கள் அவ்வணிக்குத் தற்போது ஒரு பொருட்டே அல்ல எனக் கூறிவரும் சில கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக இத்தொடர் அமைந்துள்ளது.


                                      


இதனிடையே நேற்று நடந்த பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியிலும் சென்னை அணி தோற்றுள்ளதால் அவ்வணி ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆப் செல்ல வாய்ப்பு உள்ளதா அல்லது பறிபோனதா எனும் கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. 


மேலும் படிக்க | சென்னையை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு


சென்னையை பொறுத்தவரை, விளையாடிய 10 போட்டிகளில் 3 இல் மட்டுமே வென்றுள்ள அந்த அணி 6 புள்ளிகள் மட்டுமே பெற்று 9 ஆவது இடத்தில் உள்ளது. ரன் ரேட்டிலும் அதள பாதாளத்தில்உள்ளது. இதன் காரணமாக நேரடியாக ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றே கூறலாம். அதேநேரம் வாய்ப்பு  முழுமையாகப் பறிபோகவில்லை.


 சென்னை அணி அடுத்த 4 போட்டிகளிலும் கட்டாயம் வென்றே ஆகவேண்டும். அதேபோல ஒவ்வொரு போட்டியிலும் எதிரணிகளை அதிக வித்யாசத்தில் தோற்கடிக்கவேண்டும். இது தவிர மற்ற அணிகளின் வெற்றி- தோல்வியும் இவ்விஷயத்தில் முக்கியமானது. இவையெல்லாம் கைகொடுத்தால் மட்டுமே சென்னை அணியால் ப்ளே ஆஃப் பற்றி யோசிக்கவே முடியும்.


மேலும் படிக்க | மும்பை இந்த தடவை Playoffக்குப் போகுமா, போகாதா?! - எதுதான் உண்மை?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR