சென்னை அணி எளிதில் வெற்றி பெற வேண்டிய பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியது.  இந்த தோல்வியின் மூலம் பிளே ஆப் செல்லும் கனவு கேள்விக்குறி ஆகி உள்ளது.  சென்னை அணியின் புதிய கேப்டன் ஜடேஜா தலைமையில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருந்த சென்னை அணிக்கு மீண்டும் கேப்டனாக தோனி பொறுப்பேற்றார்.  இருப்பினும் பெங்களூரு அணிக்கு எதிரான தோல்வி தற்போது சென்னை அணியின் பிளே ஆப் கனவை தகர்த்துள்ளது.  நடப்பு சாம்பியன் ஆனா சென்னை அணிக்கு இந்த நிலைமையா என்று ரசிகர்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர்.  இருப்பினும் இன்னும் பிளே ஆப் செல்ல சில வழிகள் சென்னை அணிக்கு உள்ளது.  இன்னும் மீதமுள்ள 20 போட்டிகளின் முடிவுகள் அடிப்படையில் சென்னை அணி பிளே ஆப் செல்ல வாய்ப்பு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | சன்ரைசர்ஸூக்கு எதிராக வரலாறு படைத்த வார்னர் - அகில உலக சாதனை


பிளே ஆப் செல்ல வாய்ப்புகள்:


மேட்ச் நம்பர் 51- குஜராத் - மும்பை அணிகள் போட்டியில் ப்ளே ஆப் விட்டு ஏற்கனவே வெளியேறியுள்ள மும்பை அணி வெற்றி பெற்றால் சென்னைக்கு வாய்ப்பு உள்ளது.  வெற்றி பெறவில்லை என்றாலும் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் குஜராத் அணி உள்ளதால் பெரிய பாதிப்பு இருக்காது.  


மேட்ச் நம்பர் 52 - பஞ்சாப்- ராஜஸ்தான் போட்டியில் ராஜஸ்தான் அணி கண்டிப்பா வெற்றி பெற வேண்டும். 


மேட்ச் நம்பர் 53 - லக்னோ - கொல்கத்தா போட்டியில் ஆள் மோஸ்ட் ப்ளே ஆப் உள்ள இருக்கிற லக்னோ அணி வெற்றி பெற வேண்டும்.


மேட்ச் நம்பர் 54 - சன்ரைசர்ஸ் - பெங்களூர் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற வேண்டும்.   


மேட்ச் நம்பர் 55 - சென்னை - டெல்லி போட்டியில் - சென்னை அணி கண்டிப்பா வெற்றி பெற வேண்டும். 


இதில் சென்னை அணி தோல்வியை தழுவினால் அதிகாரபூர்வமா ப்ளே ஆப் விட்டு வெளியேறி விடும்.  


மேட்ச் நம்பர் 56 - மும்பை - கொல்கத்தா மேட்ச் - இதுலயும மும்பை கண்டிப்ப வின் பண்ணனும்.


மேட்ச் நம்பர் 57 - லக்னோ - குஜராத் போட்டியில் எந்த அணி வெற்றி பண்ணாலும் சென்னைக்கு பாதிப்பு கிடையாது.


மேட்ச் நம்பர் 58 - ராஜஸ்தான் - டெல்லி - இந்த போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற வேண்டும்.  


மேட்ச் நம்பர் 59 - சென்னை - மும்பை  - இந்த போட்டியில் சென்னை வெற்றி பெற வேண்டும்.  


மேட்ச் நம்பர் 60 - பெங்களூர் - பஞ்சாப் - இந்த போட்டியில்பெங்களூரு வெற்றி பெற வேண்டும்.  


மேட்ச் நம்பர் 61 - கொல்கத்தா- சன்ரைசர்ஸ் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற வேண்டும். 


மேட்ச் நம்பர் 62 - சென்னை - குஜராத் - இந்த போட்டியில் சென்னை கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். 


மேட்ச் நம்பர் 63 - லக்னோ - ராஜஸ்தான் போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும் பெரிய பாதிப்பு இருக்காது.  


மேட்ச் நம்பர் 64 - பஞ்சாப் - டெல்லி போட்டியில் டெல்லி கண்டிப்பா வெற்றி பெற வேண்டும்.   


மேட்ச் நம்பர் 65 - மும்பை - சன்ரைசர்ஸ் - இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற வேண்டும்.


மேட்ச் நம்பர் 66 - கொல்கத்தா -லக்னோ - இந்த போட்டியில் லுக்நோ வெற்றி பெற வேண்டும்.


மேட்ச் நம்பர் 67 - பெங்களூர் - குஜராத் - இந்த போட்டியில் குஜராத் வெற்றி பெற வேண்டும்.


மேட்ச் நம்பர் 68 - ராஜஸ்தான் - சென்னை - இந்த போட்டியில் சென்னை வெற்றி பெற்றால் 14 புள்ளிகளுடன் பிளே ஆப் போக தகுதி பெரும்.


மேட்ச் நம்பர் 69 - மும்பை - டெல்லி - இந்த போட்டியில் மும்பை கண்டிப்பா வெற்றி பெற வேண்டும். 


மேட்ச் நம்பர் 70 - சன்ரைசர்ஸ் - பஞ்சாப்  - இந்த போட்டியில் பஞ்சாப் கண்டிப்பா வெற்றி பெற வேண்டும். 


கடைசி 3 போட்டிகளும் ரொம்ப முக்கியமானது. காரணம் டெல்லி, சன்ரைசர்ஸ் அணிகள் வெற்றி பெற்றால் 3 அணிகள் ஒரே புள்ளியில் நிற்கும்.  மேலே சொன்னது போல அனைத்தும் நடந்தால் புள்ளி பட்டியலில் முதல் மூன்று இடத்தில் குஜராத், லக்னோ, ராஜஸ்தான் அணிகள் இருக்கும்.   மேலும் சென்னை அணி மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் அதிக ரன் ரேட்டில் வெற்றி பெற வேண்டும்.  


மேலும் படிக்க | கலங்கி நிற்கும் மும்பைக்கு அடி கொடுக்க காத்திருக்கும் குஜராத் - பாண்டியாவின் பலே பிளான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR