2021-22 ஆஷஸ் போட்டிக்காக ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்ய உள்ள இங்கிலாந்து அணிக்கு பல முக்கியமான நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஷஸ் தொடர் என்பது ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆகும். இந்தத் தொடர் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை விளையாடப்படுகிறது.  இந்த வருடம் ஆஷஸ் ஆஸ்திரேலியாவில் 2021 டிசம்பரில் தொடங்குகிறது.  ஆஸ்திரேலியா அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள கடுமையான கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த வருடம் ஆஷஸ் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்தது. ஆனால் சமீபத்தில் வந்த அறிவிப்பின் படி இங்கிலாந்து வீரர்கள் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது உறுதி ஆகி உள்ளது.



இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் அறிக்கையில் இந்த தொடர் பற்றிய சிறப்பான முன்னேற்ற நடைவடிக்கைகள் ஏற்பட்டுள்ளதாகவும், சுற்றுப்பயணத்திற்கு சில நிபந்தனை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  மேலும் சுற்றுப்பயணத்திற்க்கான ஒரு குழுவைத் ECB அமைத்துள்ளது. அதில் பல நிபந்தனைகளும் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வீரர்கள் தங்களது குடும்பத்துடன் சுற்றுப்பயணம் வர ECB கேட்டுள்ளது. வரவிருக்கும் நாட்களில் இந்த விஷயங்களைத் தீர்க்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் உதவி தேவைபடுவதாக கூறி உள்ளது ECB.  


இரு நாட்டு குழுக்களுக்கிடையேயான பேச்சு வார்த்தைகள் சுமூகமாக நடைபெறும் என்று கூறப்படுகிறது.  கொரோனா காலகட்டம் என்பதால் தனிமை படுத்தல் மிகவும் கடினமாக உள்ளது.   ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மலான் மற்றும் கிறிஸ் வோக்ஸ் போன்ற வீரர்கள் மற்றும் சில பயிற்சியாளர்கள் அடுத்த வாரம் தொடங்கும் டி 20 உலகக் கோப்பைக்காக நான்கு மாதங்கள் வரை அவர்களது குடும்பங்களை விட்டு விலகி இருக்க வேண்டி உள்ளது.  நாட்டிற்கு நாடு நடைமுறையில் இருக்கும் மாறுபட்ட கொரோனா விதிமுறைகள் வீரர்கள் மத்தியில் மன ரீதியான பிரச்சனைகளை உண்டாக்குகின்றன என கூறியுள்ளது ECB.



இந்த வருடம் ஆஷஸ் தொடர் இங்கிலாந்திற்கு சற்று சருக்கலாகவே உள்ளது.  2010-11 முதல் ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து அணி வெற்றி பெறவில்லை. ஏற்கனவே பல முக்கிய வீரர்களின் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜோஃப்ரா ஆர்ச்சர் முழங்கை பிரச்சனையால் விலகி உள்ளார். பென் ஸ்டோக்ஸ் கடந்த ஜூலை முதல் விளையாடவில்லை மேலும் சமீபத்தில் அவரது விரலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதே நேரத்தில் மொயீன் அலி சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.  இங்கிலாந்து ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை உறுதிப்படுத்தும் வகையில் ஆஸ்திரேலியாவிற்கு  $ 200 M  ஒளிபரப்பு மூலம் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.


ALSO READ டி20 உலகக் கோப்பை: வீரர்களை கண்காணிக்க ஐசிசியின் புதிய முடிவு!


ALSO READ தீடீரென ஓய்வை அறிவித்த சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR