இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர், ஆல்ரவுண்டர் மொயீன் அலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுவரை 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அலி நேற்று நடந்த ஐபிஎல் போட்டிக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2014 ஆம் ஆண்டில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான மெயின் அலி, 29.2 ஆவ்ரேஜில் 2914 ரன்கள் அடித்து 195 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். "எனக்கு இப்போது 34 வயது ஆகிறது, என்னால் முடிந்தவரை கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் சிறந்தது, நாம் சிறப்பாக விளையாடினாள் உலகமே நம் பக்கம் உள்ளது போல் ஒரு உணர்வு வரும்.
என் குடும்பதத்துடன் செலவிடும் நேரத்தை இழக்கிறேன், உலகின் சிறப்பான வீரர்களுடன் நான் விளையாடி வருகிறேன். ஆனாலும், என்னுடைய பந்து வீச்சினால் சிறப்பான விக்கெட்களை நான் எடுக்கவில்லை. நான் டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் ரசிக்கிறேன், ஆனால் அந்த தீவிரம் சில நேரங்களில் அதிகமாக இருக்கும். போதுமான அளவு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி உள்ளதாக உணர்கிறேன் என்று கூறினார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வந்த போது, மெயின் அலி தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் உலகளவில் 12வது சிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தார். ஒரு சுழற்பந்து வீச்சாளராக, அவரது மிகச்சிறந்த காலம் 2017 மற்றும் 2019 க்கு இடையில் இருந்தது. 2017 இல், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 26 விக்கெட்டுகளை வீழ்த்தினார், ஓவல் மைதானத்தில் சிறப்பான ஒரு ஹாட்ரிக் விக்கெட் பெற்றார், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கைக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் ஆறு டெஸ்ட் போட்டிகளில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இங்கிலாந்து அணிக்காக ஓப்பனிங் முதல் கடைசி வரை எந்த நிலையிலும் விளையாடினார் அலி. 2016 ஆம் ஆண்டு 46.86 அவரேஜில் 1078 ரன்கள் எடுத்தார். எம்ஆர்எஃப் டயர்ஸ் ஐசிசி ஆண்கள் டெஸ்ட் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் மூன்றாம் இடத்திற்கு தகுதி பெற்றார். தனது டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு ஓய்வு அளித்தாலும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐசிசி டி 20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்தின் அணியில் அலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தனது பயிற்சியாளர் பீட்டர் மூர்ஸ் மற்றும் கிறிஸ் சில்வர்வுட்கும், குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்த மெயின் அலி கடிமான காலங்களில் இவர்கள் தான் தன் உடன் இருந்தார்கள் என்று கூறினார். தற்போது ஐபிஎல் 2021 போட்டியில் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார்.
ALSO READ ஜட்டு ஜட்டு ஜட்டு! ஜடேஜாவின் அதிரடியில் கடைசி ஓவரில் சீஎஸ்கே வெற்றி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR