மீண்டும் கேப்டனாக களமிறங்கும் தோனி? சிஎஸ்கே அணிக்குள் வெடிக்கும் சர்ச்சை!
சிஎஸ்கே மீதமுள்ள 10 போட்டிகளில் 8 போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் தான் பிளே ஆஃப் வாய்ப்பு கிடைக்க சாத்தியம் உள்ளது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 15வது சீசன் கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா ஊரடங்கால் இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த முறை புதிதாக இரண்டு அணிகள் இணைந்து மொத்தம் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐபிஎல் ஜாம்பவான்களான சிஎஸ்கே, மும்பை அணிகள் இந்த முறை தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் பின் தங்கியுள்ளன.
மேலும் படிக்க | தோனி செய்த அந்த மறக்க முடியாத விசயம்! நினைவிருக்கிறதா?
சிஎஸ்கே அணி பந்துவீச்சில் சொதப்பி வருகிறது. தொடர்ந்து இந்த அணி 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளதால், பிளே சுற்றுக்கு செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் முதல் 4 போட்டிகளில் ஒரு அணி தோல்வி அடைவது இது இரண்டாவது முறை. 2014-ம் ஆண்டு மும்பை அணி தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்திருந்தது. மும்பை அணியும் இந்த முறை இரண்டாவது முறையாக தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.
சிஎஸ்கே மீதமுள்ள 10 போட்டிகளில் 8 போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் தான் பிளே ஆஃப் வாய்ப்பு கிடைக்க சாத்தியம் உள்ளது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா விலக உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஜடேஜா, இதுவரை ஒரு வெற்றியைக் கூட அணிக்காக பெற்றுத்தரவில்லை. அதோடு அவருக்கு அணியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் சுதந்திரமும் முழுவதுமாக வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. பிளேயிங் 11-ஐ தோனி தான் தீர்மானித்து வருவதாகவும், மைதானத்திலும் அவர் தான் அணியை வழி நடத்துவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் தன்னால் எந்த முடிவும் எடுக்கப்பட முடியாத நிலையில், தோல்வியை மட்டும் தனது பெயரில் எழுதுவதை ஏற்க முடியாமல் புலம்பி வருகிறாராம் ஜடேஜா. சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக முடிவெடுத்துள்ளாராம். ஒருவேளை ஜடேஜா அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினால், மீண்டும் தோனி தான் தலைமை ஏற்க வேண்டிய சூழல் வரும் என்று சிஎஸ்கே வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மேலும் படிக்க | CSKவுக்கு ஜடேஜாவைக் கேப்டனாக்குனதுதான் தப்பாம்!- சொன்னது யார் தெரியுமா!?
தோனி இந்த சீசன் விளையாடிய பின்பு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி இருக்கலாம் எனவும், ஜடேஜாவுக்கு நெருக்கடி கொடுக்காமல் தோனி அவரை முடிவு எடுக்க விடுவது தான் அணிக்கு நல்லது எனவும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி எடுத்த சில மோசமான முடிவுகளும் அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. எது எப்படியோ சிஎஸ்கே அணி அடுத்த போட்டியிலாவது வெற்றிக் கணக்கை தொடங்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR