நடப்பு ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை வெற்றிக் கணக்கையே தொடங்கவில்லை. விளையாடிய நான்கு போட்டிகளிலும் அந்த அணி தோல்வியையே சந்தித்துள்ளது. சென்னை அணி தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோற்பது புதிது இல்லைதான்; ஆனால் தொடரின் முதல் 4 போட்டிகளிலும் தோற்பது இதுதான் முதல் தடவை. இதனால் சென்னை அணி நிர்வாகம் கடும் அப்செட்டில் உள்ளதாம்.
சென்னை ரசிகர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்; சமூக வலைதளங்களில் வலம்வரும் அவர்களது புலம்பல் பதிவுகளைப் பார்த்தாலே அவர்கள் எந்த அளவுக்கு சோக மோடில் இருக்கிறார்கள் எனத் தெரிந்துகொள்ளலாம். அதேநேரம் அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி சென்னை ஃபார்முக்குத் திரும்பும் எனவும் அவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். சென்னை அணியினுடைய தொடர் தோல்விக்கான காரணங்களாக பலரும் பலவிதமான கருத்துகளைக் கூறிவருகிறார்கள்.
மேலும் படிக்க | கேப்டன்சியில் தோனி தலையிடுவதாக ஜடேஜா புகார்: CSKவுக்குள் புது பூகம்பம்?!
இந்நிலையில் முன்னாள் இந்திய வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி சென்னை அணி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்துத் தெரிவித்துள்ள அவர், கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலக முடிவெடுக்கும் பட்சத்தில் பாப் டு பிளெசிஸை வேறு அணிக்குச் செல்லவிட்டிருக்கக்கூடாது எனவும் அவரையே கேப்டனாக நியமித்திருக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னைக்காக சிறப்பான பங்களிப்பை ஆற்றியுள்ள டு பிளெசிஸ் ஒருவேளை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அது சரியான தேர்வாக இருந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால் ரவீந்திர ஜடேஜாவின் இயல்பான ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கேப்டனாக இல்லாமல் வெறும் வீரராக மட்டும் களமிறங்கி இருந்தால் அது சிறப்பான முடிவாக அமைந்திருக்கும் எனவும் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ‘அந்த’ டீம் இந்த தடவை Play-Offக்கே போகாது!- சாபம் விடுகிறாரா ரெய்னா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR