CSK vs GT: முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்த சமீர் ரிஸ்வி! தோனி கொடுத்த ரியாக்சன்!
CSK vs GT Highlights: ஐபிஎல்லில் தனது முதல் பந்திலேயே ரஷித் கானை இரண்டு சிக்ஸர்கள் அடித்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளார் இளம் வீரர் சமீர் ரிஸ்வி.
CSK vs GT Highlights: சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸை வெற்றி பெற்றது. இந்த சீசன் சென்னை அணிக்கு ஒரு புதிய அத்தியாயத்தை கொடுத்துள்ளது. ருத்ராஜ் தலைமையில் சென்னை அணி ஆர்சிபிக்கு எதிரான முதல் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. அதே வெற்றியுடன் தற்போது குஜராத்க்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி உள்ளது. இந்த போட்டியில் தீக்சனாவிற்கு பதில் பத்திரனாவை கொண்டு களம் இறங்கியது சென்னை அணி. சென்னை போன்ற ஒரு மைதானத்தில் ஒரே ஒரு ஸ்பின்னர் உடன் களமிறங்கிய சிஎஸ்கே அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. மேலும் குஜராத்க்கு எதிராக இளம் சமீர் ரிஸ்வி தனது அறிமுக போட்டியிலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
மேலும் படிக்க - CSK vs GT: சிக்ஸர் துபே அதிரடியில் குஜராத்தை வெற்றி பெற்ற சென்னை அணி!
மிடில் ஓவரில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து இருந்தார் சிவம் துபே. ஸ்பின்னர்களை சிக்ஸர், பவுண்டரி என அடித்து நொறுக்கிய துபே 19வது ஓவரில் ரஷீத் கான் பந்தில் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து இளம் வீரர் சமீர் ரிஸ்வி பேட்டிங் செய்ய வந்தார். ஐபிஎல்லில் அவர் எதிர்கொள்ளும் முதல் பந்திலேயே அதுவும் ரஷீத் கான் போன்ற ஒரு பவுலரை சிக்சருக்கு பறக்க விட்டார். மீண்டும் அதே ஓவரில் எக்ஸ்ட்ரா கவரில் ஒரு சிக்ஸர் அடித்தார். இதன் மூலம் ரிஸ்வி ரஷித் கானின் ஓவரில் இரண்டு சிக்ஸர்களை அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். ரிஸ்வி சிக்ஸ் அடித்த போது டிரஸ்ஸிங் ரூமில் இருந்த எம்.எஸ். தோனி அதனை பார்த்து ரசித்து சிரித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சென்னை அபார வெற்றி
ஐபிஎல் 2024ல் குஜராத் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி மிகவும் எதிர்பார்ப்பில் இருந்தது. காரணம் இந்திய அணியின் இரண்டு இளம் வீரர்கள் இந்த இரண்டு அணிகளுக்கும் கேப்டனாக உள்ளனர். இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுப்மான் கில்லின் குஜராத் டைட்டன்ஸ் அணியை 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற கில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியில் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக ஆடிய ரச்சின் ரவீந்திரா 20 பந்துகளில் 46 ரன்கள் அடித்தார். மறுபுறம் ருதுராஜ் கெய்க்வாட் 36 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மிடில் ஓவர்களில் சிவம் துபே ஒரு சிறப்பான அரை சதத்தை எட்டினார்.
துபே 23 பந்துகளில் 51 ரன்கள் எடுக்க, அடுத்து வந்த சமீர் ரிஸ்வி 6 பந்துகளில் 14 ரன்களுடன் அடித்தார். இதன் மூலம் சென்னை 20 ஓவர்களில் 206/6 ரன்களை எடுக்க முடிந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் குஜராத் டைட்டன்ஸ் ஆரம்பத்திலேயே முக்கிய விக்கெட்களை இழந்து தடுமாறியது. 20 ஓவர்கள் முடிவில் 143/8 ரன்கள் மட்டுமே அவர்களால் அடிக்க முடிந்தது. இதனால் சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிஎஸ்கே பந்துவீச்சாளர்களில் தீபக் சாஹர், முஸ்தபிசுர் ரஹ்மான், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ