CSK v GT IPL 2024: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 17வது ஐபிஎல் சீசனின் ஏழாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் எதிர்க் கொண்டனர். இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி டைவ் அடித்து பாய்ந்து பிடித்த கேட்ச் அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. இந்த வயதிலும் எம்.எஸ்.தோனியின் சிறந்த உடற்தகுதி இளம் வீரர்களுக்கு உதாரணமாக அமைந்துள்ளது. 42 வயதிலும் அவரின் கீப்பிங் ஸ்டைலில் எந்தவித தொய்வும் இல்லை. "வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் குறையல" என்பதைப் போல ஒரு சிறந்த கேட்சை பிடித்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற ஜிடி (GT) அணியின் கேப்டன் ஷுப்மான் கில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் தலா 46 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள். அதனைத்தொடர்ந்து ஷிவம் துபே 23 பந்துகளில் 51 ரன்களும், டேரில் மிட்செல் 24* ரன்களும் எடுத்தனர். இறுதியாக 20 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 206 ரன்கள் எடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் ரஷித் கான் 2 விக்கெட்டும், சாய் கிஷோர், ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் மோஹித் ஷர்மா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
மேலும் படிக்க - RCB vs PBKS: விராட் கோலி கொடுத்த மாஸ் ஸ்பீச்! என்ன செய்ய போகிறது பிசிசிஐ?
207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தீபக் சாஹர் அதிர்ச்சி அளித்தார். சிஎஸ்கேக்கு சிறந்த தொடக்கத்தை அளித்த சென்னை அணியின் பந்து வீச்சாளர் தீபக் சாஹர், ஷுப்மான் கில்லை 8 ரன்களில் வெளியேற்றினார். பின்னர் விருத்திமான் சாஹா 21 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட் ஆக்கினார். 34 ரன்களுக்கு இரண்டு முக்கிய விக்கெட்டை குஜராத் அணி இழந்தது. இந்த இரண்டு சிறந்த விக்கெட்டையும் தீபக் சாஹர் கைப்பற்றினார்.
Still got it #ThalaThalaDhaan
— Chennai Super Kings (@ChennaiIPL) March 26, 2024
மூன்றாவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய விஜய் சங்கர், 12 ரன்கள் எடுத்திருந்த போது, மிட்செல் வீசிய 8வது ஓவரின் 3வது ஃபுல்-லெங்த் பந்தை, விஜய் ஷங்கர் டிரைவ் செய்ய முயன்றார். அந்த பந்தை 42 வயதான தோனி, சுறுசுறுப்பாக, அற்புதமாக டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க - CSK vs GT: முஸ்தாபிசுர்க்கு பதில் பதிரானா? சென்னை அணி எடுத்த முக்கிய முடிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ