இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியா ஹெண்டிங்க்லே நகரில் நடைபெற்ற 3வது போட்டியில் தோல்வியை தழுவியது. இங்கிலாந்து சிறப்பாக விளையாடி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த தொடரில் இதுவரை டேவிட் வார்னர் சொதப்பிக் கொண்டிருக்கிறார். ஒரு இன்னிங்ஸ் கூட குறிப்பிடத்தக்க ரன்களை அவர் அடிக்கவில்லை. 2021க்குப்பின் சதமடிக்க முடியாமல் தடுமாறி வந்த அவர் கடந்த டிசம்பர் மாதம் தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்தார். நூறாவது டெஸ்டில் இரட்டை சதமடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையைக் கூட படைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | விராட் கோலி ஒன்னும் சூப்பர் இல்லை, வார்னர் இனி அவ்வளவு தான் - ஆகாஷ் சோப்ரா


ஆனால் அதன்பிறகு மீண்டும் பார்ம் அவுட்டுக்கு போனார். இந்தியாவுக்கு எதிரான 2023 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரிலும் சுமாராகவே ஆடினார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் பெரிதாக ரன் அடிக்காததால் வார்னர் மீது விமர்சனங்கள் குவியத் தொடங்கியது. சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தாலும், அந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் வார்னருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 


ஏனென்றால் ஆஷஸ் தொடரில் இதுவரை ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சில் மட்டும் 17 முறை அவுட்டாகியுள்ளது. இந்த தொடரிலும் அவருடைய பந்துவீச்சில் மட்டுமே அவுட்டாகிக் கொண்டிருக்கிறார். இதனால் வார்னரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இதனால் 4வது போட்டியில் மிட்சேல் மார்ஷை தொடக்க வீரராக களமிறக்க திட்டமிட்டுள்ள ஆஸ்திரேலியா வார்னரை கழற்றி விட முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  சொல்லப்போனால் அதைப்பற்றி கேப்டன் பட் கம்மின்ஸ் 3வது போட்டியின் முடிவில் செய்தியாளர்கள் சந்திப்பில் மறைமுகமாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டேவிட் வார்னரின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அவருடைய மனைவி கேண்டீஸ் வார்னர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


குறிப்பாக அடுத்த போட்டி மட்டுமல்லாமல் இனி ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்த்தும் வகையில் அவருடைய பதிவு அமைந்துள்ளது. இது பற்றி ஹெண்டிங்க்லே நகரில் நடைபெற்ற 3வது போட்டியில் தன்னுடைய குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அவர், “டெஸ்ட் கிரிக்கெட்டுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எங்களின் ஒரு சகாப்தம் முடிவு வந்துள்ளது. இது வேடிக்கையாக இருக்கிறது. இருப்பினும் உங்களுடைய மகள்கள் உங்களுக்கு எப்போதும் மிகப் பெரிய ஆதரவாளர்களாக இருப்பார்கள். லவ் யூ டேவிட் வார்னர்” என்று எழுதியுள்ளார்


இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் டேவிட் வார்னர் இனி விளையாடுவதை பார்ப்பது மிகவும் கடினம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2024 டி20 உலக கோப்பையுடன் மொத்தமாக ஓய்வு பெற உள்ளதாகவும் வார்னர் தெரிவித்துள்ள நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்கூட்டியே விடை பெறுகிறாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


மேலும் படிக்க | கடைசி சான்ஸ்! ஈஸியா விட்டுட மாட்டோம்! வீரியமாக களமிறங்கும் சீனியர் கிரிக்கெட்டர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ