சிஎஸ்கே வீரருக்கு திருமணம் - வேட்டி சட்டையுடன் கொண்டாடிய தோனி
சிஎஸ்கே வீரர் டெவோன் கான்வோய் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் தோனி உள்ளிட்ட சென்னை வீரர்கள் தமிழக பாரம்பரிய முறைப்படி வேட்டை சட்டை அணிந்து பங்கேற்றனர்.
சிஎஸ்கே அணி வீரர் டெவோன் கான்வோய் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார். அவரின் நெருங்கிய தோழியான கிம் வாட்சனை மணக்க உள்ளார். இதனையொட்டி சென்னை அணி கேம்ப் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டது. ஐபிஎல் போட்டிகளுக்கு நடுவே டெவோன் கான்வாய் ப்ரீ வெட்டிங் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சென்னை வீரர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க | 'KGF'- ல நம்ம தினேஷ் கார்த்திக்கா?! - நெட்டிசன்ஸின் வேற லெவல் கண்டுபிடிப்பு!
சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தற்போதைய கேப்டன் ஜடேஜா, பிராவோ, ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட வீரர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்திருந்தனர். மணமகன் டெவோன் கான்வோயும் வேட்டை சட்டனை அணிந்திருந்தார். கலகலப்பாக நடைபெற்ற இவ்விழாவில் வீரர்கள் அனைவருக்கும் சிறப்பான விருந்து அளித்தார் டெவோன் கான்வாய். சென்னை அணியும் டெவோன் கான்வாய்க்கு உற்சாகமாக விருந்து அளித்து கவுரவித்தது.
ஆனால், இந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக களமிறங்கிய டெவோன் கான்வாயுக்கு தொடர் சிறப்பாக அமையவில்லை. இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர் மிக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவருக்கு மட்டுமல்ல, சென்னை அணிக்கும் இந்த தொடர் மோசமாக தொடங்கியுள்ளது. நடப்பு சாம்பயினான சென்னை அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தோனிக்குப் பிறகு முதன்முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்ற ஜடேஜா தலைமையில், இனி வரும் ஆட்டங்களில் சென்னை அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | பழைய நிலைக்கு வர வேண்டும் என்றால் விராட் கோலி ஓய்வு எடுக்க வேண்டும்: ரவி சாஸ்திரி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR