பழைய நிலைக்கு வர வேண்டும் என்றால் விராட் கோலி ஓய்வு எடுக்க வேண்டும்: ரவி சாஸ்திரி

Ravi Shastri On Virat Kohli: தொடர்ந்து ஏமாற்றமளித்து வரும் விராட் கோலி, ஒரு சாதனையையும் படைத்தார். அதாவது 100 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்ற சாதனையை செய்தார். 

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 20, 2022, 02:39 PM IST
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் கோஹ்லி முதல் பந்தில் அவுட்.
  • ஏமாற்றமளித்து வரும் விராட் கோலி, ஒரு சாதனையையும் படைத்தார்.
  • முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஒரு சிறிய இடைவெளி தேவை- ரவி
பழைய நிலைக்கு வர வேண்டும் என்றால் விராட் கோலி ஓய்வு எடுக்க வேண்டும்: ரவி சாஸ்திரி title=

மும்பை (ஐஏஎன்எஸ்): விராட் கோலி தனது பேட்டை சமாளிக்க கிரிக்கெட் போட்டியில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மூன்று விதமான போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் விராட் கோஹ்லி. நவம்பர் 2019 முதல் அவர் டெஸ்ட், ஒருநாள், டி20 என எந்த வடிவத்திலும் சதம் அடிக்கவில்லை. அதேபோல நடந்துகொண்டிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக்கில் ஏழு போட்டிகளில் 19.83 சராசரியில் வெறும் 119 ரன்களுடன் மோசமான நிலையில் ஆடி வருகிறார். 

100 போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை:
நேற்று செவ்வாயன்று, டி. ஒய். பாட்டீல் ஸ்டேடியத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர் கோஹ்லி முதல் பந்தில் அவுட் ஆனார். இருப்பினும் அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வதில் வெற்றி பெற்றார். அவர் சிறப்பாக விளையாடி 64 பந்துகளில் 96 ரன்கள் குவித்தார். 

மேலும் படிக்க: நாங்கள் கேங்ஸ்டர் இல்லை மான்ஸ்டர் என நிரூபித்த ஆர்சிபி

ஆனால் தொடர்ந்து ஏமாற்றமளித்து வரும் விராட் கோலி, ஒரு சாதனையையும் படைத்தார். அதாவது 100 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்ற சாதனையை செய்தார். கோஹ்லி 17 டெஸ்ட், 21 ஒருநாள், 25 டி20 மற்றும் 37 ஐபிஎல் போட்டிகளில் ஆடி மூன்று இலக்கங்களை எட்டாமல் சென்றுள்ளார் என்று கிரிக்கெட் புள்ளியியல் நிபுணர் மஹ்சர் அர்ஷாத் ட்வீட் செய்துள்ளார்.

விராட் கோஹ்லிக்கு அறிவுரை வழங்கிய ரவி சாஸ்திரி:
கடந்த ஆண்டு முன்கூட்டியே கைவிடப்பட்ட டபிள்யூடிசி 23 தொடரை (WTC23 Series) முடிக்க இந்தியா ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு ஒரு டெஸ்ட் போட்டிக்காகப் பயணிக்க உள்ளது, இதற்கிடையில் இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த காலத்தில் கோஹ்லியுடன் நெருக்கமாக பணியாற்றிய சாஸ்திரி, "முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஒரு சிறிய இடைவெளி தேவை" என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க: பழைய விண்டேஜ் விராட் கோலி! புகழாரம் சூட்டும் ஆகாஷ் சோப்ரா

"நான் நேரடியாகவே செல்கிறேன். விராட் கோலி அதிகமாக அழுத்தத்தில் உள்ளார். இணங்கு யாருக்காவது ஓய்வு தேவைப்பட்டால், அது அவருக்கு தான் வேண்டும்" என்று செவ்வாயன்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசிய ரவி சாஸ்திரி கூறியுள்ளார். கோஹ்லி கடைசியாக 2019 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் சதம் அடித்தார். "இரண்டு மாதங்கள் அல்லது ஒன்றரை மாதங்கள், அது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணத்திற்கு முன் அல்லது அதன் பிறகு, அவருக்கு ஓய்வு தேவை, ஏனென்றால் அவருக்கு இன்னும் ஆறு-ஏழு ஆண்டுகள் கிரிக்கெட் காலம் உள்ளது. மனச் சோர்வின் காரணமாக நீங்கள் அதை இழப்பதை நான் விரும்பவில்லை என்றார். 

முன்னாள் இங்கிலாந்து பேட்டர் கெவின் பீட்டர்சன் இதே கருத்தை எதிரொலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: 'KGF'- ல நம்ம தினேஷ் கார்த்திக்கா?! - நெட்டிசன்ஸின் வேற லெவல் கண்டுபிடிப்பு!

 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News