சென்னை டீம் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி திடீர் விலகல்- புது கேப்டன் யார்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி திடீரென விலகியுள்ளார்.
ஐபிஎல்லின் 15ஆவது சீசன் வருகிற 26ஆம் தேதி தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதவுள்ளன. இந்த நிலையில் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி திடீரென விலகியுள்ளார். இந்த ஐபிஎல் சீசனில் அவர் கேப்டனாக செயல்படாமல் வெறும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ஐபிஎல்-ல் கடைசி ஓவரில் அதிக சிக்ஸ்சர்கள் அடித்தது இவரா?
தோனிக்குப் பதிலாக சென்னை அணியின் புதிய கேப்டனாக அந்த அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில சீசன்களாக சென்னை அணிக்கு சிறப்பான பங்களிப்பை ஜடேஜா வழங்கிவருகிறார். இந்த நிலையில் அவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை அணிக்கு இதுவரை தோனி மற்றும் ரெய்னா மட்டுமே இதுவரை கேப்டனாக இருந்துள்ள நிலையில் தற்போது 3ஆவது நபராக ஜடேஜா கேப்டனாகியுள்ளார்.
தோனியின் இந்த திடீர் விலகல் சென்னை அணியின் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கேப்டன் பொறுப்பில் ஏன் விலகினார் என இந்த விவகாரம் இணையத்திலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
மேலும் படிக்க | ரிக்கி பாண்டிங் ஸ்ப்ரிங் பேட் யூஸ் பண்ணாரா? - உண்மை என்ன?!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR