CSK-வில் தோனிக்கு 2-ம் இடம் ஏன்? யார் எடுத்த முடிவு? சுவாரஸ்ய தகவல்
சென்னை அணி தக்கவைத்துள்ள வீரர்கள் பட்டியலில், தோனிக்கு 2ம் இடம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த முடிவை யார் எடுத்தது என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல் (IPL) தொடரில் லக்னோ, அகமதாபாத் ஆகிய 2 அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதால், அந்த அணிகள் அடுத்த ஆண்டு நடைபெறும் ஏலம் மூலம் வீரர்களை எடுக்க உள்ளன. அதற்கு முன்பாக, ஏற்கனவே இருக்கும் 8 அணிகளும் தங்களிடம் உள்ள வீரர்களில் அதிகபட்சம் 4 பேரை மட்டும் தக்கவைத்துக் கொண்டு, எஞ்சியவர்களை விடுவிக்குமாறு ஐ.பி.எல் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டிருந்தது. தக்கவைக்கப்படும் வீரர்களின் லிஸ்டைக் கொடுக்க நவம்பர் 30, (நேற்று) கடைசி தேதியாகும்.
மேலும் படிக்க | IPL 2023: சிஎஸ்கே துருப்புச்சீட்டு இவர் தான்: ஹர்பஜன் சிங் கணிப்பு
அதன்படி, அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் லிஸ்டைக் கொடுத்துவிட்டன. 4 முறை சாம்பியனான சென்னை அணியில் கேப்டன் மகேந்திரசிங் தோனி (DHONI), ரவீந்திர ஜடேஜா, ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் மொயீன் அலி ஆகியோர் தக்கவைக்கப்பட்டனர். தோனி தக்க வைக்கப்பட்டிருந்தாலும், ரீட்டெயின் லிஸ்டில் ஜடேஜாவுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டிருந்தது. அவர் 16 கோடி ரூபாய் ஆண்டு வருமானத்தில் சென்னை அணிக்காக தக்க வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக கேப்டன் தோனி 12 கோடி ரூபாய் ஊதியத்தில் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பட்டியல் பலருக்கும் வியப்பாக இருந்தது. தோனிக்கு அதிக விலை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜடேஜாவுக்கு கூடுதல் விலை இருந்தது. இந்த முடிவை யார் எடுத்திருப்பார்கள்? என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. இதற்கான பதிலை அந்த அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் லக்ஷிமிபதி பாலாஜி தெரிவித்துள்ளார். தோனியை அதிக விலையில் தக்க வைக்க வேண்டும் என்பது நிர்வாகத்தின் எண்ணமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால், தோனி அதனை விரும்பவில்லை எனக் கூறிய அவர், ஜடேஜாவை அதிக விலை கொடுத்து தக்க வைக்க வேண்டும் என கூறியதே அவர் தான் என விளக்கமளித்துள்ளார்.
மேலும் படிக்க | IPL 2023: தோனியின் சரவெடி.. சேப்பாக்கத்தில் தொலைந்த பந்துகள்..! சம்பவம் இருக்கு
தோனியின் இந்த அணுகுமுறை அவருக்கு பாராட்டைப் பெற்றுக் கொடுத்துள்ளது. ரீட்டெயின் லிஸ்டுக்கு முன்பாகவே, தன்னை அதிக விலையில் தக்க வைக்க வேண்டாம் என அவர் அணி நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது. மற்ற வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு தோனி கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியான நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக தோனியின் ஊதியம் அமைந்துள்ளது. இதில் இன்னொரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், தோனி அடுத்த ஆண்டு ஐ.பி.எல் விளையாடுவாரா? இல்லையா? என்ற கேள்விக்கு விடைகிடைத்துள்ளது. தோனி அடுத்த ஆண்டு ஐ.பி.எல் விளையாடுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR