Dhoni: RCB கோப்பையை வெல்ல நீங்க ஹெல்ப் பண்ணலாமே? - ரசிகரின் கேள்விக்கு தோனியின் ரியாக்ஷன்
Dhoni`s Viral Response: சிஎஸ்கே அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுவிட்டதால், ஒரேமுறை சாம்பியன் பட்டம் வெல்ல ஆர்சிபிக்கு நீங்கள் உதவலாமே என ரசிகர் கேட்ட கேள்விக்கு தோனி கொடுத்த ரியாக்ஷன் வைரலாகியுள்ளது.
Dhoni: தூபாய் சென்ற தோனி ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடினார். அவரிடம் ஐந்துமுறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் நீங்கள் ஒருமுறை ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல நீங்கள் உதவலாமே என ரசிகர் ஒருவர் கேட்டார். அந்த கேள்விக்கு தோனி கூலாக பதில் அளித்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் பேசிய ரசிகர் ஒருவர், தான் 16 வருடங்களாக ஆர்சிபி ரசிகராக இருப்பதாக அறிமுகப்படுத்திக் கொள்கிறார். ஆர்சிபி அணி ஒருமுறையாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆசை தனக்கு இருப்பதாகவும், அதற்கு தோனி நீங்கள் உதவ வேண்டும் என கேட்டார்.
வீடியோவில் பேசும் ரசிகர், " உங்களுடைய தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது. ஆர்சிபி அணி இன்னும் ஒருமுறைகூட சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. நீங்கள் ஆர்சிபி அணிக்கு வந்து ஒருமுறையாவது சாம்பியன் பட்டத்தை வென்று கொடுக்க வேண்டும்" என கேட்டார்.
மேலும் படிக்க | IPL Auction 2024: ஸ்டார் பிளேயராக இருந்தும் ஐபிஎல் ஏலத்தில் விற்காமல் போன வீரர்கள்!
அவரின் கேள்விக்கு பதில் அளித்த தோனி, "ஆர்சிபி அணி மிகச்சிறந்த அணி, என்னைப் பொறுத்தவரையில் இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பற்றி தான் கவலையாக இருக்கிறது என கூறினார். தொடர்ந்து பேசிய தோனி, ஐபிஎல் தொடரில் இருக்கும் அனைத்து அணிகளுமே மிக சிறப்பான அணிகள் தான். ஆனால் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை எல்லாமே திட்டமிட்டப்படி சரியாக நடைபெறாது. ஒவ்வொரு அணியும் கோப்பையை வெல்லும் அளவுக்கு சிறந்த வீரர்களை வைத்துள்ளது.
ஆனால், வீரர்கள் காயம் காரணமாக சரியான நேரத்தில் விளையாட முடியாமல் போவதால் பிரச்னை எழுகிறது. அணிக்குள் பிளேயர்கள் காம்பினேஷன் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும். அதேநேரத்தில் சென்னை அணியை விட்டு விலகி இன்னொரு அணி கோப்பையை வெல்வதற்கு உதவினால் சிஎஸ்கே ரசிகர்கள் என்ன நினைப்பார்கள்?" என சிரித்துக் கொண்டே கேட்டார். மேலும், இப்போது சிஎஸ்கே அணியைப் பற்றி கவலைப் பட்டுக் கொண்டிருப்பதாகவும், தன்னுடைய அணியில் கவலைப்படுதற்கு ஏராளமான விஷயங்கள் இருப்பதாகவும் கூறினார். அவரின் இந்த பதிலைக் கேட்டு ரசிகர்கள் வியப்படைந்தனர்.
மேலும் படிக்க | அடுத்த தோனி, 10 கோடி கொடுக்கவும் தயாராக இருந்த கங்குலி - யார் இந்த குமார் குஷாக்ரா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ