ஆர்சிபி அணிக்காக இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் தினேஷ் கார்த்தின் பழைய மெசேஜ் ஒன்றை இணையத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த அவரை, இந்த ஆண்டு அந்த அணி விடுவித்தது. இதனால் ஏலத்துக்கு வந்த தினேஷ் கார்த்திக்கை ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணி எடுத்தது. இதற்கு முன்னரும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி இருக்கும் அவர், மீண்டும் ஒருமுறை அந்த அணிக்காக விளையாடும் வாய்ப்பை கடந்த ஐபிஎல் ஏலம் மூலம் பெற்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பொல்லார்டை கடுப்பேற்றிய முன்னாள் பார்ட்னர்


அவரை அந்த அணி நம்பி ஏலம் எடுத்ததுபோலவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். 32*(13), 14*(7), 44*(23), 7*(2), 34(14), 66*(34), மற்றும் 13*(8) என 7 இன்னிங்ஸ்களாக அட்டகாசமான பார்மில் உள்ளார் தினேஷ் கார்த்திக். ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டனான விராத்கோலி பேட்டி ஒன்றில் பேசும்போது, இந்த ஆண்டின் மிஸ்டர் ஐபிஎல் தினேஷ் கார்த்திக் தான் எனத் தெரிவிதார். இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் தினேஷ் கார்த்திக் எதிர்கால லட்சியம் குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார்.



ஐபிஎல் போட்டியில் விளையாடுவது மிகவும் சிறப்பானது என்றாலும், அதன் மூலம் இந்திய அணிக்கு தேர்வாகும் வாய்ப்பு கிடைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் எனக் கூறியுள்ளார். இந்திய அணிக்காக வரும் 20 ஓவர் உலகக்கோப்பை  அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பது தன்னுடைய இலக்கு எனக் கூறியுள்ள தினேஷ் கார்த்திக் அதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என பேசியுள்ளார். அத்துடன், தினேஷ் கார்த்திக் பேசிய இன்னொரு மெசேஜூம் வைரலாகியுள்ளது.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவதற்கு கடந்த 13 ஆண்டுகாலமாக காத்திருப்பதாக கூறியுள்ளார். 



"2008 ஆம் ஐபிஎல் ஏலத்தின்போது நான் ஆஸ்திரேலியாவில் இருந்தேன். அப்போது இருந்த தினேஷ் கார்த்திக், தமிழ்நாட்டிலேயே சிறந்த வீரராக இருக்கிறோம். இந்தியாவுக்காக ஆடும் ஒரே தமிழ்நாட்டு வீரர். அதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்படியும் ஏலத்தில் எடுத்துவிடும் என நினைத்தேன். ஆரம்பத்தில் எடுக்கவில்லை என்பதால் பின்னர் விளையாட வாய்ப்பு இருக்கும் என நினைத்தேன். அப்படியே 13 ஆண்டுகளாக காத்திருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேட்டி வைரலாகியுள்ளது.


மேலும் படிக்க | ரோகித் சர்மாவின் இந்திய அணியின் கேப்டன்சிக்கும் ஆபத்து - இவர் பெயர் பரிசீலனை


கடந்த ஐபிஎல் ஏலத்தில் தினேஷ் கார்த்திக்கை ஏலம் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. ஆனால், அவர்கள் நினைத்த தொகைக்கும் அதிகமான விலைக்கு அவர் சென்றதால், ஏலத்தில் எடுக்கவில்லை.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR