மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியிருப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஐபிஎல் தொடரில் முதல் அணியாகவும் தொடரில் இருந்து வெளியேறி உள்ளது. இது அவரது கேப்டன்ஷிப் மீதும் சந்தேக பார்வையை எழுப்பியுள்ளது. இந்திய அணியின் வடிவிலான அணிக்கும் கேப்டனாக இருப்பதால், அவருக்கு பதிலாக புதிய கேப்டன் யாரை நியமிக்கலாம் என்பது குறித்து பிசிசிஐ-யும் ஆலோசிக்க தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
ரோஹித்தின் கேப்டன்சி மீது விமர்சனம்
மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்வியால் கேப்டன் ரோகித் சர்மா மிகுந்த அதிர்ச்சியில் உள்ளார். 8 போட்டிகளில் தோல்வியை தழுவியிருப்பதை அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. சில முக்கியமான வீரர்கள் அணியில் இருந்து வெளியேறியதும், ரோகித் சர்மா மீது ஒட்டுமொத்த பார்வையும் திரும்பியது. அதற்கேற்றார்போல் அவரும் சிறப்பாக விளையாடவில்லை. அணி தேர்வு, தனிப்பட்ட ஆட்டம் என ஒட்டுமொத்தமாக ரோகித் சர்மா மீது பலரும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
மேலும் படிக்க | பொல்லார்டை கடுப்பேற்றிய முன்னாள் பார்ட்னர்
புதிய கேப்டன் யார்?
இந்திய அணிக்கான 3 வடிவ கிரிக்கெட் அணிகளுக்கும் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவுக்கு இப்போது 34 வயதாகிறது. விரைவில் 20 ஓவர் உலகக்கோப்பை வர இருப்பதால் அதுவரை அவருடைய கேப்டன்ஷிக்கு எந்த ஆபத்தும் நேராது. ஒருவேளை அந்த தொடரில் சொதப்பினால் உடனடியாக இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு புதிய வீரர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இப்போதைக்கு அந்த ரேஸில் கே.எல்.ராகுல், பும்ரா, ரிஷப் பன்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் உள்ளனர். அவர்களில் யாரேனும் ஒருவர் இந்திய அணிக்கான கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
ஹர்திக் பாண்டியாவுக்கு வாய்ப்பு உள்ளதா?
ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக இந்திய அணியில் விளையாடாமல் ஓய்வெடுத்து வந்த அவர், ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுத்து சிறப்பாக விளையாடி வருகிறார். மேலும் குஜராத் அணியின் கேப்டனாகவும் அவர் சிறப்பாக செயல்படுவதால், இந்திய அணிக்கான கேப்டன் ரேஸிலும் இணைந்துள்ளார். அவரது தலைமையிலான குஜராத் அணி 7 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. பேட்டிங்கில் 6 போட்டிகளில் விளையாடி 295 ரன்கள் எடுத்து ஆரஞ்சு கேப் ரேஸிலும் இருக்கிறார்.
மேலும் படிக்க | பொல்லார்டை கடுப்பேற்றிய முன்னாள் பார்ட்னர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR