MS Dhoni ரசிகர்களுக்கு சூப்பர் செய்தி: முக்கிய குறிப்பை வெளியிட்டது CSK நிர்வாகம்
ஏஎன்ஐயிடம் பேசிய சிஎஸ்கே அதிகாரி ஒருவர், ஏலத்தில் முதல் தக்கவைப்பு அட்டை அணியின் கேப்டனை தக்கவைத்துக்கொள்ள பயன்படுத்தப்படும் என்று கூறினார்.
IPL 2022: வெற்றியை எதிர்பார்த்து காத்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு CSK அணி கோப்பையை வென்று பெரிய மகிழ்ச்சியை அளித்தது. அந்த மகிழ்ச்சிக்கு மகுடம் சூட்டுவது போல, போஸ்ட் மேட்ச் பிரசண்டேஷனில் ஹர்ஷா போக்லே கேட்ட கேள்விக்கு தோனி பதில் அளித்தார். தன் ஆட்டம் இன்னும் முடிவடையவில்லை என தோனி ஹர்ஷா போக்லேவிடம் கூறினார். இது ரசிகர்களின் குதூகலத்தை இன்னும் அதிகப்படுத்தியது.
இந்த செய்தியை தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகமும் உறுதிபடுத்தியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏஎன்ஐயிடம் பேசிய சிஎஸ்கே (CSK) அதிகாரி ஒருவர், ஏலத்தில் முதல் தக்கவைப்பு அட்டை (retention card) அணியின் கேப்டனை தக்கவைத்துக்கொள்ள பயன்படுத்தப்படும் என்று கூறினார்.
"தக்கவைப்பு இருக்கும், அது ஒரு உண்மை. தக்கவைப்புகளின் எண்ணிக்கை பற்றி இன்னும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் தோனியை தக்கவைத்துக்கொள்வதற்கு அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஏனென்றால், முதல் ரிடென்ஷன் கார்ட் அவருக்குதான் பயன்படுத்தப்படும். அணிக்கு அதன் கேப்டன் மிக முக்கியம், அவர் அடுத்த ஆண்டும் எங்கள் அனியுடன் விளையாடுவார் என்பதில் உறுதியாக உள்ளோம்” என்று அந்த அதிகாரி கூறினார்.
ALSO READ: தோனிய தலனு சொன்னது குத்தமா?! தனுஷை திட்டித் தீர்க்கும் அஜித் ரசிகர்கள்
இது குறித்து கேட்கப்பட்டபோது, தோனி (MS Dhoni) எப்போதும்போல அவர் பாணியில் பதில் அளித்தார். ஐபிஎல்லில் தனது நான்காவது பதக்கத்தை வென்ற பிறகு, ஐபிஎல்லில் அவரது எதிர்காலம் குறித்து கேட்கப்பட்டபோது, தோனி, “நான் முன்பு சொன்னது போல, அது பிசிசிஐ-யின் கையில் உள்ளது. இரண்டு புதிய அணிகள் வருவதால், சிஎஸ்கேவுக்கு எது நல்லது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். முதல் மூன்று அல்லது நான்காவது இடங்களில் நான் இருப்பது முக்கியமல்ல. ஃப்ரான்சைஸ் பாதிக்கப்படாமல் ஒரு வலுவான அணி உருவாக வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளில் யார் பங்களிக்க முடியும் என்பதை நாம் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.
தனது அணியைப் பற்றி பேசுவதற்கு முன்னர், மிகச்சிறப்பாக ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியை அவர் பாராட்டினார்.
தோனி, "நாங்கள் விளையாடிய அனைத்து இடங்களிலும், தென்னாப்பிரிக்காவில் விளையாடியபோது கூட, எப்போதும் சிஎஸ்கே ரசிகர்கள் எங்களை உற்சாகப்படுத்த அதிக அளவில் மைதானத்திற்கு வந்துள்ளார்கள். அதுதான் எங்களுக்கு வேண்டும். அவர்கள் அனைவருக்கும் நன்றி. நாங்கள் சென்னையில் விளையாடுவது போல் உணர்கிறோம். ரசிகர்களுக்காக சென்னைக்கு திரும்புவோம்.” என்றார்.
தோனி இல்லாத CSK அணியை ரசிகர்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா என்பது ஒரு கடினமான கேள்விதான். அடுத்த ஆண்டு அவர் CSK அணியில் விளையாடுவாரா என்ற கேள்வி ஒவ்வொரு CSK ரசிகரின் மனதிலும் இருந்த நிலையில், தற்போது CSK நிர்வாகம் இதை உறுதி செய்திருப்பது CSK ரசிகர்களுக்கு பெரிய அளவிலான மகிழ்ச்சியை அளித்துள்ளது.
ALSO READ: T20 World Cup இந்திய-பாகிஸ்தான் போட்டி பற்றி சவுரவ் கங்குலி கருத்து
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR