இந்தியாவில் மற்ற எந்த விளையாட்டுகளையும் தவிர கிரிக்கெட்டிற்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பல சினிமா, அரசியல் பிரபலங்களும் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஐபிஎல் 2021 போட்டிகள் தொடங்கியது. அதன் பின் கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டு மீண்டும் ஐக்கிய ஏமிரகத்தில் தொடங்கப்பட்டது.
இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக விளையாடி பைனல் போட்டிக்கு முன்னேறியது. நேற்று நடைபெற்ற பைனல் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது சென்னை அணி. சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு அனைத்து தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருந்தது.
சினிமா இயக்குனர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை கூறினர். தமிழக முதல்வர் முக ஸ்டாலினும் தனது வாழ்த்துக்களை கூறி இருந்தார். நடிகர் தனுஷ் சிஎஸ்கே வீரர்களுக்கு வாழ்த்து கூறி 'One & Only enga thala dhoni' க்கு என்று கூறினார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத அஜித் ரசிகர்கள் தற்போது தனுஷை திட்டி தீர்த்து வருகின்றனர். அஜித்தை அவரது ரசிகர்கள் தல என்றே அழைத்து வருகின்றனர். தோனியையும் அவரது ரசிகர்கள் தல என்றே அழைக்கின்றனர். இதனால் இரண்டு தரப்பு ரசிகர்களுக்கும் இடையே அவ்வப்போது இணையத்தில் சண்டை நடைபெறும்.
Remembering Shane watson’s innings with his knee bleeding !! FAF , Gaikwad , uthappa, jadeja and finally the one and only one enga thala dhoni ku ……. #CHAMPIONS
— Dhanush (@dhanushkraja) October 15, 2021
தற்போது இதனை தனுஷ் பக்கம் திருப்பி உள்ளனர் அஜித் ரசிகர்கள். நன்றி கெட்ட தனுஷ் என்று டிவிட்டரில் ஹாஷ்டேக் போட்டு தனுஷை திட்டி வருகின்றனர்.
ALSO READ 300 டி20 போட்டிகளில் கேப்டன்: தோனியின் கேப்டன்சி சாதனைகள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR