இந்திய கிரிக்கெட் அணி  வீரர் தினேஷ் கார்த்திக் தற்போது வெறித்தனமான ஃபார்மில் உள்ளார். கடந்த ஐபிஎல்லில் பெங்களூர் அணிக்குள் வந்த அவர், அவ்வணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக மாறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிடில் ஆர்டரில் நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேனாக மாறியுள்ள அவர் தனது அதிரடியான ஆட்டத்தால் எதிரணிகளை மிரட்டிவருகிறார். ஐபிஎல்லில் காட்டிய அதிரடி சர்வதேச போட்டிகளுக்கான வாசலை அவருக்கு மீண்டும் திறந்துவிட்டுள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ரிஷப் பந்த் தலைமையிலான இந்திய அணியில் இடம் பிடித்தார் டி.கே.



ஐபிஎல்லைப்போலவே, 5 போட்டிகள் கொண்ட இந்த டி-20 தொடரும் அவருக்கு நன்றாகவே அமைந்தது எனலாம். குறிப்பாக 4ஆவது போட்டியில் மிரட்டலாக விளையாடிய டி.கே, அரைசதம் அடித்துக் கலக்கினார். இறுதிப் போட்டியில் மழை வந்ததால் அத்தொடர் 2-2 என சமனில் முடிந்தது. இந்நிலையில் டி- 20 போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.


மேலும் படிக்க | DM முதல் DK வரை.. முதல் டி-20 டீமில் இருந்த வீரர்களின் தற்போதைய நிலை- ஒரு பார்வை!


 


இதில் தினேஷ் கார்த்திக் கணிசமான இடங்கள் முன்னேறியுள்ளார். 3 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் ஆடாமல் இருந்த தினேஷ் கார்த்திக் இந்தத் தொடர் மூலமாக 108 இடங்கள் முன்னேறியுள்ளார். அதன்படி, புதிய பட்டியலில் அவருக்கு 87 ஆவது இடம் கிடைத்துள்ளது.


இத்தொடரில் சிறப்பாக விளையாடிய மற்றொரு வீரர் இஷான் கிஷன் 6ஆவது இடம் பிடித்து அசத்தியுள்ளார். இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்துவருகிறார்.


மேலும் படிக்க | நான் மட்டும் இருந்திருந்தா... 2011 World cup பற்றி கொளுத்திப் போட்ட அக்தர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR