IND vs Aus: இரண்டாவது டெஸ்டின் முதல் நாள் ஆட்ட நேர இறுதியில், Aus-195 all out, Ind-36/1
இன்று தன் முதல் டெஸ்ட் போட்டியை ஆடிய சிராஜுக்கு அஷ்வின் டெஸ்ட் கேப்பை வழங்கினார். சிராஜை பொறுத்தவரை அவருக்கு இது நல்ல துவக்கமாக இருந்தது.
சனிக்கிழமை சிட்னியில் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் (எஸ்சிஜி) இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியின் தொடக்க நாளில் இந்திய பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ஆர் அஸ்வின் ஆகியோர் இணைந்து ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையை திக்குமுக்காட வைத்தனர். தன் முதல் டெஸ்ட் போட்டியை விளையாடிய மொஹம்மத் சிராஜும் மிகச் சிறப்பாக பந்து வீசி அனைவரது கவனத்தையும் கவர்ந்தார்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட இறுதியில், முதல் இன்னிங்சில், ஆஸ்திரேலியா 195 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. தனது முதல் இன்னிங்சை துவக்கிய இந்தியா ஆட்ட நேர இறுதியில் 1 விக்கெட் இழப்புக்கு 36 ரன்களை எடுத்துள்ளது.
முன்னதாக, இன்று தன் முதல் டெஸ்ட் போட்டியை ஆடிய சிராஜுக்கு ரவிசந்திரன் அஷ்வின் (Ravichandran Ashwin) டெஸ்ட் கேப்பை வழங்கினார். சிராஜை பொறுத்தவரை அவருக்கு இது நல்ல துவக்கமாக இருந்துள்ளது. 50 ஆவது ஓவரில் மார்னஸ் லாபூசாக்னை வீழ்த்தி தனது முதல் டெஸ்ட் விக்கெட்டை எடுத்தார் அவர். அதன் பிறகு ஆஸ்திரேலியாவின் 61 வது ஓவரில் கேமரூன் க்ரீனின் விக்கெட்டை எடுத்தார்.
வலது கை ஆட்டக்காரரான கிரீன் திகைத்துப் போகும் வகையில் அடுத்தடுத்து மூன்று ஷார்ட் பிட்ச் பந்துகளைப் போட்ட சிராஜ் திட்டமிட்டு அவரது விக்கெட்டை வீழ்த்தினார்.
சிராஜின் அபார பந்துவீச்சை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் (Australia) தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்தியது.
ALSO READ: IND vs Aus: மூன்றாவது டெஸ்ட் போட்டியில் Rohit Sharma விளையாடுவாரா?
SCG-யில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் தொடக்க நாளில் பும்ரா (Jasprit Bumrah) ஆஸ்திரேலியாவின் முதல் விக்கெட்டை எடுத்தார். ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் ஜோ பர்ன்ஸை அவர் பூஜ்ஜியத்தில் அவுட் ஆக்கினார். அஸ்வின் மேத்யூ வேட் (30) மற்றும் ஸ்டீவ் ஸ்மித் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து எடுத்தார்.
இருப்பினும், 4 வது விக்கெட்டுக்கு லாபுசேஞ்ச் (48) மற்றும் டிராவிஸ் ஹெட் (38) இடையில் வலுவான கூட்டணி நீடித்தது. இருவரும் சேர்ந்து 86 ரன்களை குவித்தனர்.
ஹெட் மற்றும் லாபுசாக்னேனின் விக்கெட்டுகள் வீழ்ந்த பிறகு ஆஸ்திரெலியா திக்குமுக்காடிப் போனது. கேப்டன் டிம் பெயின் (13) மற்றும் லோயர் மிடில் ஆர்டரால் இந்திய பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியவில்லை.
பாக்சிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 195 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. அஸ்வின் தனது 24 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை எடுத்து 35 ரன்களை கொடுத்தார். சிராஜ் தனது 15 ஓவர்களில் 40 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தனது இரண்டாவது இன்னிங்சை ஆடத் தொடங்கிய இந்திய அணி (Team India) ஆட்ட நேர இறுதியில், 11 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 36 ரன்களை எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரரான மயாங்க் அகர்வால் ரன் எதுவும் எடுக்காமல் அட்டமிழந்தார். தனது முதல் சர்வதேச போட்டியில் களம் இறங்கிய ஷுப்மன் கில் 28 ரன்களுடனும் செதேஷ்வர் புஜாரா 7 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருக்கின்றனர்.
ALSO READ: Cricket: விராட் கோலியிடம் அஜிங்க்யா ரஹானே மன்னிப்பு கேட்பது ஏன்?
இந்திய வீரர்கள்: மயங்க் அகர்வால், சுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஆர் அஸ்வின், உமேஷ் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரீத் பும்ரா.
ஆஸ்திரேலியா வீரர்கள்: ஜோ பர்ன்ஸ், மேத்யூ வேட், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், டிம் பெயின், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜோஷ் ஹேசில்வுட்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR