IND vs Aus: மூன்றாவது டெஸ்ட் போட்டியில் Rohit Sharma விளையாடுவாரா?

IPL 2020 போட்டிகளின் போது ஏற்பட்ட தொடை எலும்பு காயத்திலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்த ரோஹித் ஷர்மா, இந்த மாத தொடக்கத்தில் ஃபிட்னஸ் பரிசோதனையை முடித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 23, 2020, 06:20 PM IST
  • ரோஹித் ஷர்மா மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியுமா என்பது குறித்து குழப்பம்.
  • சிட்னியில் கோவிட் தொற்று திடீரென அதிகரித்துள்ளது.
  • மூன்றாவது டெஸ்ட் சிட்னியில் நடக்க திட்டமிடப்பட்டுள்ளது.
IND vs Aus: மூன்றாவது டெஸ்ட் போட்டியில் Rohit Sharma விளையாடுவாரா? title=

சிட்னியில் புதிதாக அதிக எண்ணிக்கையிலான மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னுக்கு மாற்றப்பட்டால் ரோஹித் சர்மா மீண்டும் தனிமைப்படுத்திக்கொள்ள தேவை இருக்காது என தகவல் வெளியாகியுள்ளது.

ரோஹித் தற்போது சிட்னியில் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்கிறார். ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க அவர் தயாராகி வருகிறார்.

இருப்பினும், டிசம்பர் 16 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு (Australia) வந்த ரோஹித், சிட்னியில் இருந்து மெல்போர்னுக்கு வந்து மூன்றாவது டெஸ்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவாரா என்ற கவலைகள் இருந்தன. சிட்னியில் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மாநிலத்திற்கு வந்தால் மீண்டும் அதற்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று விக்டோரியன் பிரதமர் டான் ஆண்ட்ரூஸ் உறுதிப்படுத்திய பின்னர் இந்த சந்தேகங்கள் நீக்கப்பட்டன.

ஐபிஎல் 2020 (IPL 2020) போட்டிகளின் போது அவருக்கு ஏற்பட்ட தொடை எலும்பு காயத்திலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்த ரோஹித் ஷர்மா, இந்த மாத தொடக்கத்தில் ஃபிட்னஸ் பரிசோதனையை முடித்தார். அவர் டிசம்பர் 15 அன்று ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டார்.

ALSO READ: IND v AUS: ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறிய Virat Kohli; கேப்டன் பொறுப்பு ரகானேவிடம் ஒப்படைப்பு

ஒரு ஊடக அறிக்கையின்படி, 33 வயதான ரோஹித் ஷர்மா (RohitSharma), ஒரு மத்திய சிட்னி ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளார். BCCI ஆரம்பத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் ரோஹித் ஷர்மாவுக்கு மெல்போர்னில் தங்குமிடம் வழங்குமாறு கோரியது. அப்படி செய்தால் அவர் உடனடியாக இந்திய அணியுடன் இணைவதற்கு வசதியாக இருக்கும் என்று கருதப்பட்டது.

எனினும், மெல்போர்னில் (Melbourne) ரோஹித்தை தனிமைப்படுத்த வேண்டுமானால், விக்டோரியன் அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அறையில் அவர் தங்கியிருக்க வேண்டும் என்று கிரிக்கெட் ஆஸ்திரெலியா தன் செயலை நியாயப்படுத்தியிருந்தது. இதுதான் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கான வழக்கமான செயல்முறை என கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூறியது. இருப்பினும், சிட்னியில் அவருக்கு அதிக விசாலமான அறைகளும் உட்புறங்களில் பயிற்சிக்கான வசதிகளும் கிடைத்திருக்கும்.

இரண்டாவது டெஸ்ட் டிசம்பர் 26 முதல் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. மீதமுள்ள இரண்டு போட்டிகளும் சிட்னி மற்றும் பிரிஸ்பேனில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளன.

ALSO READ: மும்பை கிளப்பில் முன்னாள் கிரிக்கெட்டர் Suresh Raina கைது: விவரம் உள்ளே

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News