ஒரு மாறுபட்ட, புத்துணர்வு பெற்ற அணியாக காட்சியளித்த இந்திய அணி இன்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டித் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்தியா கைப்பற்றியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிகவும் மோசமான நிலையில் இந்தியா முதல் டெஸ்டை ஆடியது. ஆனால், அதிலிருந்து அபாரமாக மீண்டு வந்த இந்திய அணி ஆஸ்திரேலிய அணியையும் அதிர வைத்தது என்றே கூறலாம். மெல்போர்னில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியை நான்கு நாட்களுக்குள் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.


மதிய உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய (Australia) அணியை 200 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த இந்திய அணி வெற்றிக்கு 70 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் ஆடத்தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் (35 நாட் அவுட்) மற்றும் ஸ்டாண்ட்-இன் கேப்டன் அஜிங்க்யா ரஹானே (Ajinkya Rahane) (27 நாட் அவுட்) மெதுவாக ஆடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இப்போது இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் இருக்கிறது.


அடிலெய்டில் நடந்த டெஸ்ட் போட்டியில், 36 ரன்களுக்கு இந்தியாவை பௌல் அவுட் செய்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது வழக்கமான வீரியத்துடன் இந்த டெஸ்டிலும் ஆடத் தொடங்கினர். ஆனால் உறுதியுடன் ஆடிய கில் அவர்களை அபாரமாக எதிர்கொண்டார். தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே முத்திரைப் படைத்தார்.


எனினும், இந்த போட்டி முற்றிலும் ரஹானேவுக்கு சொந்தமானது. விராட் கோலி (Virat Kohli) இந்தியா திரும்பியவுடன் அடிலெய்ட் டெஸ்டுக்குப் பிறகு கேப்டன் பதவியை அவர் ஏற்றுக்கொண்டார். அபாரமான முறையில் அணியை வழி நடத்தினார்.


ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்ட ரஹானே, புத்துணர்ச்சியடைந்த ஒரு அணியை மிகச்சிறப்பாக வழிநடத்திச் சென்றார்.


பாக்சிங்க் டே டெஸ்டில் 137 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் பந்து வீச்சாளர்கள் மீண்டும் இந்த சாதனையை எம்.சி.ஜியின் டிராப்-இன் விக்கெட்டில் செய்துள்ளனர்.


ALSO READ: Australia vs India 2வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய வீரர்களை பந்தாடிய இந்திய பந்துவீச்சாளர்!!


இந்தியா முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை 195 ரன்களுக்கு ஆட்டமிழக்க வைத்தது. இரண்டாவது ஆட்டத்தில் 200 ரன்களில் கட்டுப்படுத்தியது. வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவின் காயத்தையும் மீறி இந்திய பந்துவீச்சாளர்கள் இந்த வெற்றியை அடந்தனர்.


சீமர் முகமது சிராஜ் யாதவ் ஆட முடியாத குறையை நன்றாக பூர்த்தி செய்தார். தனது முதல் டெஸ்ட் போட்டியில் அவர் தனது திறமையை அழகாக எடுத்துக்காட்டினார்.


ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் டெஸ்டில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 28 ரன்களை கொடுத்த ஜடேஜா முதல் இன்னிங்சில் 57 ரன்கள் எடுத்தார்.


தேர்வாளர்களின் தேர்வை சரி என நிரூபித்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், மிகவும் தேவையான 29 ரன்களை எடுத்தார்.


ஜோ பர்ன்ஸ் (0 மற்றும் 4) மிகவும் மோசமான துவக்கத்தையே அளித்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் வழக்கமான தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் விரைவில் குணமடைந்து தகுதி பெற வேண்டும் என்பது அந்த அணியின் விருப்பமாக இருக்கும்.


ALSO READ: IND vs Aus: மூன்றாவது டெஸ்ட் போட்டியில் Rohit Sharma விளையாடுவாரா?


டெய்லெண்டர்ஸ் ஸ்டார்க் (14 நாட் அவுட்), பாட் கம்மின்ஸ் (22) மற்றும் ஹேசில்வுட் (10) ஆகியோர் தங்கள் பேட்டிங் அணியின் பல வீரர்களைக் காட்டிலும் ஓரளவு நின்று ஆடி ஆஸ்திரேலிய அணியை 200-க்கு அழைத்துச் சென்றனர்.


மூன்றாம் நாளில் ஆறு விக்கெட் இழப்புக்கு 99 என்ற நிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணி, இந்திய அணி (Team India) சேஸ் செய்ய அதிக இலக்கை தருவதற்கான முனைப்புடன்தான் இருந்தது. எனினும், சிராஜின் ஷார்ட் பாலில் கேமரான் க்ரீன் அடித்த பந்தை ஜடேஜா பாய்ந்து பிடித்ததில் கிரீன் 45 ரன்களுக்கு அவுட் ஆனார். இதோடு ஆஸ்திரேலியாவின் நம்பிக்கையும் கலைந்தது. இந்திய அணி அபார வெற்றியை அடைந்தது.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR