இந்திய அணியில் இருந்து ரிஷப் பந்த் நீக்கம்! காரணம் இதுதான்!
India vs Bangladesh: வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் தொடக்க ஆட்டத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் இந்திய அணியில் இருந்து ரிஷப் பந்த் விடுவிக்கப்பட்டார்.
India vs Bangladesh: வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் விடுவிக்கப்பட்டதாக பிசிசிஐ அறிவித்தது. பந்த் நீக்கப்பட்டதற்கான சரியான காரணம் தெரியவில்லை, ஆனால் அந்த வெளியீட்டில், 'பிசிசிஐ மருத்துவக் குழுவுடன் கலந்தாலோசித்த பிறகு' முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது, அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது. "பிசிசிஐ மருத்துவக் குழுவுடன் ஆலோசித்து, ரிஷப் பந்த் ஒருநாள் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அணியில் இணைவார். மாற்று வீரர் யாரும் தேடப்படவில்லை. முதல் ஒருநாள் போட்டிக்கான தேர்வில் அக்சர் படேல் இல்லை," என்று பிசிசிஐ அறிக்கை வெளியிட்டு இருந்தது.
மேலும் படிக்க | India vs Bangladesh: முதல் ஒருநாள் போட்டியை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
தொடர்ந்து ரன்கள் அடிக்க சிரமப்பட்ட பந்திற்கு இந்திய அணியில் இடம் பெரும் விவாதத்திற்கு உட்பட்டது. நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவுக்காக மேட்ச்-வின்னிங் சதத்தை அடித்த பிறகு, லாடர்ஹில்லில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அதிகபட்சமாக 44 ரன்களுடன் ஒரு அரை சதத்தை கூட பந்த் பெறத் தவறிவிட்டார். டி20 போட்டிகளில் 14, 17, 20*, 27, 3, 6, 6 மற்றும் 11 என்ற ஸ்கோருடன் அவர் போராடி வருகிறார்.
சமீபத்தில் முடிவடைந்த ODI மற்றும் T20 தொடரில், நான்கு இன்னிங்ஸ்களில் இருந்து 42 ரன்கள் மட்டுமே எடுத்து, பந்த் தொடர்ந்து சரிவில் உள்ளார். பந்த் இல்லாத நிலையில், டாக்கா ஒருநாள் போட்டியில் கே.எல். ராகுல் இந்தியாவுக்காக விக்கெட் கீப்பிங் செய்கிறார் மற்றும் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய உள்ளார்.
நட்சத்திர ஜோடி ஷிகர் தவான் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஏற்கனவே தோள்பட்டை காயம் காரணமாக அணியில் இருந்து விளக்கினார்.
மேலும் படிக்க | IND vs BAN : லக்கேஜ் இன்னும் வரல... கடுப்பில் இந்திய வீரர் - நாளைய போட்டி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ