மூன்று போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் தொடர்களை விளையாட தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.  இதை தொடர்ந்து, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று நடைபெறுகிறது. முதல் போட்டி, லக்னோவில் உள்ள பாரத் ரத்னா அடல் பிகாரி வாஜ்பாஜ் எக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. லக்னோவில் தொடர் மழை பெய்து வந்த காரணத்தால், போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மழை விடாமல் பெய்துகொண்டே இருந்ததால், திட்டமிடப்படி 1.30 மணிக்கு டாஸ் போட இயலவில்லை. பின்னர், இரண்டு மணிநேர தாமதத்திற்கு பிறகு, 3.30 மணிக்கு டாஸ் போடப்பட்டது. இப்போட்டியில், இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான், டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். 



மேலும் படிக்க | தினேஷ் கார்த்திக்கை பார்த்து பயம் - நடுங்கும் சூர்யகுமார்... இதுக்காகவா?


போட்டி தலா 40 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. பந்துவீச்சாளர்கள் அதிகபட்சமாக 8 ஓவர்கள் வரை மட்டுமே வீச முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  1-8 ஓவர்களில் முதல் பவர்பிளே, 9-32 ஓவர்களில் இரண்டாவது பவர்பிளே, மீதமுள்ள கடைசி 8 ஓவர்களில் மூன்றாவது பவர்பிளே என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தியா: ஷிகர் தவான்(கேப்டன்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், அவேஷ் கான். 



தென்னாப்பிரிக்கா: ஜான்மேன் மலான், குயின்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா(கேப்டன்), ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி, தப்ரைஸ் ஷம்ஸி.


மேலும் படிக்க | 15 வருட ஏக்கத்தை போக்க... கனவுகளுடன் ஆஸ்திரேலியா பறந்த இந்திய அணி; கோட்சூட் கிளிக்ஸ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ