தினேஷ் கார்த்திக்கை பார்த்து பயம் - நடுங்கும் சூர்யகுமார்... இதுக்காகவா?

தினேஷ் கார்த்திக்கின் நேற்றைய ஆட்டத்தை பார்த்து தான் வியந்துவிட்டதாகவும், அணியில் தனது இடம் குறித்து தனக்கே சந்தேகம் கலந்த பயம் எழுந்ததாகவும் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Oct 5, 2022, 09:39 PM IST
  • தினேஷ் கார்த்திக் நேற்றைய தென்னாப்பிரிக்கா போட்டியில் 21 பந்துகளில் 46 ரன்களை குவித்திருந்தார்.
  • டி20யில் சூர்யகுமார் யாதவ் வழக்கமாக களமிறங்கும், 4ஆவது இடத்தில் தினேஷ் கார்த்திக் நேற்று விளையாடினார்.
  • தொடர் நாயகன் விருதை சூர்யகுமார் யாதவ் வென்றார்.
தினேஷ் கார்த்திக்கை பார்த்து பயம் - நடுங்கும் சூர்யகுமார்... இதுக்காகவா? title=

தென்னாப்பிரிக்கா அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் தொடரை விளையாட இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இம்மாத 22ஆம் தேதி, டி20 உலகக்கோப்பையின் பிரதான சுற்றுகள் தொடங்க உள்ளது. எனவே, உலகக்கோப்பைக்கு முந்தைய இந்த தொடருக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. 

தென்னாப்பிரிக்கா அணியுடனான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றிருந்ததது. இருப்பினும், நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்று இறுதி டி20 போட்டியில், இந்தியா 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு முன்னதாக, ஆஸ்திரேலியா உடனான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றிருந்தது. 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில், சூர்யகுமார் யாதவ் தொடர் நாயகனாக தேர்வானார். நேற்றைய போட்டியில் சூர்யகுமார் சொதப்பியிருந்தாலும், அவரின் தொடர் அதிரடி ஆட்டம் இந்தியாவை பல போட்டிகளில் காப்பாற்றியிருக்கிறது என்றே கூறலாம். 

மேலும் படிக்க | இப்புடியா பண்ணுவ? சிராஜை திட்டிய சாஹர்! வைரலாகும் வீடியோ!

இந்நிலையில், போட்டி முடிந்த பின் சூர்யகுமார் யாதவ் போஸ்ட் மேட்ச் பெர்சென்டேஷனில் பேசினார். அப்போது, கூறிய அவர் இந்த வருடத்தில் மட்டும் 50 சிக்ஸர்களை அவர் அடித்தது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு,"நான் இதுபோன்ற புள்ளிவிவரங்களை பார்ப்பதில்லை. இதுபோன்ற சிகஸ்ரகள்தான் போட்டிக்கு தேவை. இதுபோன்ற புள்ளிவிவரங்களை நண்பர்கள் எனக்கு வாட்ஸ்அப்பில் அனுப்புவார்கள். நான் அதை பின்தொடர மாட்டேன். மகிழ்ச்சியாக விளையாட வேண்டும், அவ்வளவுதான்" என்றார். 

மேலும், தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் குறித்து பேசிய அவர்,"தினேஷ் கார்த்திக் பேட்டிங் செய்ய இன்னும் சில ஓவர்கள் கிடைக்க வேண்டும். நேற்று அவர் விளையாடியதை பார்க்கும்போது, நான்கு வீரருக்கான எனது இடம் குறித்து எனக்கே சந்தேகம் கலந்த பயம் வந்தது. நான் அதுகுறித்து பெரிதாக யோசிக்கவில்லை பார்போம்" என்றார். 

தினேஷ் கார்த்திக், கடந்த ஐபிஎல் தொடரில் இருந்து சிறப்பாக விளையாடி வரும் நிலையில், எந்த இடத்தில் இறங்கினாலும், பவுண்டரிகளை மழைகளை பொழிகிறார். நேற்றைய ஆட்டத்தில் அனைத்து டாப்-ஆர்டர் பேட்டர்களும் சொதப்பிய நிலையில், தினேஷ் கார்த்திக் 21 பந்துகளில் 46 ரன்களை குவித்திருந்தார். 

மறுபுறம், பெரும்பாலும் அணியில் நான்காவது வீரராக களமிறங்கும் சூர்யகுமார் யாதவ், சுழற்பந்து, வேகப்பந்து என பாரபட்சமின்றி 360 கோணங்களிலும் பந்தை பறக்கவிடும் நுணக்கத்தை கொண்டுள்ளார். அவரின் இந்த முறை அதிரடி ஆட்டம் இந்திய அணிக்கு, பவர்பிளேக்கு பிந்தைய மற்றும் டெத் ஓவர்களுக்கு முந்தைய ஓவர்களில் தொய்வில்லாமல் ரன்களை குவிக்க உதவுகிறது. எனவே, தான் சூர்யகுமாரின் தேவை என்பது இந்திய அணிக்கு மிகவும் அவசியமாகிறது.

அவர் இந்தாண்டு மட்டும் டி20 போட்டிகளில் 801 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். டி20 தரவரிசையில், முதலில் இருந்து வந்த இவர், இன்று வெளியான தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு நகர்ந்துள்ளார். முதல் இடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் 854 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். அவருக்கு அடுத்து 16 புள்ளிகள் பின்தங்கி 838 ரன்களுடன் சூர்யகுமார் யாதவ் 2ஆம் இடத்தை பிடித்துள்ளார்.  

தற்போதைய, சூர்யகுமாரின் வெறித்தனமான  ஃபார்ம் உலகக்கோப்பையிலும் நிடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. 

மேலும் படிக்க | 'சூர்யகுமார் தான் கவலையே...' - அடக்க முடியாமல் சிரித்த ரோஹித் - என்ன காரணம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News