இமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியா; சூர்யகுமார் அதிரடி அரைசதம்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரனா 2ஆவது டி20 போட்டியில், இந்திய அணி 237 ரன்களை குவித்துள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் தொடர்களை விளையாட தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில், முதல் டி20 போட்டி கடந்த செப். 28ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இரண்டாவது டி20, கௌகாத்தியில் பர்சபரா மைதானத்தில் இன்று நடக்கிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா, இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். தென்னாப்பிரிக்க அணி சார்பில் ஷம்ஸிக்கு பதிலாக லுங்கி இங்கிடி சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
அதன்படி களமிறங்கிய ரோஹித் - ராகுல் ஜோடி மிகச் சிறப்பான தொடக்கத்தை அளித்தது. பவர்பிளே முடிவில் இந்த ஜோடி 57 ரன்களை குவித்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 96 ரன்களை எடுத்தபோது, ரோஹித் சர்மா 43 ரன்களில் ஆட்டமிழந்தார். தான் சந்தித்த 24ஆவது பந்தில் கேஎல் ராகுல் அரைசதம் கடந்தார். அரைசதம் அடித்த அடுத்த ஓவரில் அவர் ஆட்டமிழந்தார். மொத்தம் 28 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் என 57 ரன்களை குவித்தார்.
மேலும் படிக்க | இந்திய அணி அறிவிப்பு : ஷிகர் தவான் கேப்டன்... முகேஷ் குமார் அறிமுகம் - யார் இவர்?
அடுத்து விளையாடிய சூர்யகுமார் - விராட் கோலி ஜோடியும் தென்னாப்பிரிக்காவை பதம் பார்த்தது. விராட் கோலி பொறுமை காட்ட, மறுமுனையில் சூர்யகுமார் ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் 19 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இந்த ஜோடி மட்டும் 102 ரன்களை எடுத்தபோது, சூர்யகுமார் ரன்-அவுட்டானார். அவர் மொத்தம் 22 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் என 61 ரன்களை குவித்தார். கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக் 1 பவுண்டரி, 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு இந்தியாவின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தினார்.
அதன்மூலம், இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 237 ரன்களை எடுத்துள்ளது. விராட் கோலி 49 (28) ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 17 (7) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென்னாப்பிரிக்கா சார்பில் கேசவ் மகாராஜ் மட்டும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மேலும் படிக்க | ஐயோ...! மயிரிழையில் உயிர் பிழைத்த முன்னாள் இந்திய வீரர் - போட்டியின்போது காயம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ