ஆடாம ஜெயிச்சோமடா! பாகிஸ்தானுடன் விளையாடாமலே வெற்றி பெற்ற இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தானை வீழ்த்தி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டதில் இருந்து இந்திய அணி தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. நேற்று ஓவலில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் ரோஹித் சர்மாவின் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதன் மூலம் ஐசிசி ஒருநாள் அணி தரவரிசையில் பாகிஸ்தானை முந்தியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதன் மூலம் ஐசிசி ஒருநாள் அணிகள் தரவரிசையில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. இந்த ஆட்டத்திற்கு முன், இந்தியா 105 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருந்தது, தற்போது 108 ரேட்டிங் புள்ளிகளுக்கு உயர்ந்துள்ளது, பாகிஸ்தான் 106 புள்ளி பெற்றுள்ளது.
மேலும் படிக்க | பும்ராவின் புயல் வேகம்..ஹிட்மேனின் அதிரடி - இந்தியாவின் சாதனை வெற்றி
ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து மிகக் குறைந்த ஸ்கோரை (110) அடித்தது. முகமது ஷமி மூன்று விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். பேட்டிங்கில் ரோஹித் ஷர்மா ஆட்டமிழக்காமல் 58 பந்துகளில் 78 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்தியா வெற்றியை நோக்கிச் சென்றது, தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள இங்கிலாந்தை 10 விக்கெட்டுகள் மற்றும் 31 ஓவர்கள் மீதம் இருக்கும் போது வென்றது.
கடந்த மாதம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான வெற்றியின் பின்னர் பாகிஸ்தான் தரவரிசையில் இந்தியாவை 4-வது இடத்திற்குத் தள்ளியது மற்றும் இலங்கைக்கு எதிரான தொடரை இழந்த பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பின்னர் மூன்றாவது இடத்திற்கு உயர்ந்தது. தற்போது மூன்றாவது இடத்தை இந்திய அணி பிடித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக மீதமுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகள் மற்றும் இம்மாத இறுதியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடருடன், பாகிஸ்தான் அடுத்த ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்கு முன்பு இந்தியா தனது முன்னிலையை மேலும் நீட்டிக்க முடியும். மாறாக, இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் இறுதி இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தால், இந்தியா பாகிஸ்தானுக்கு பின்தங்கி நான்காவது இடத்திற்கு தள்ளப்படலாம்.
ஐசிசி ஒரு போட்டி தரவரிசை
1. நியூசிலாந்து – 126
2. இங்கிலாந்து – 122
3. இந்தியா - 108
4. பாகிஸ்தான் – 106
5. ஆஸ்திரேலியா - 101
6. தென்னாப்பிரிக்கா - 99
7. பங்களாதேஷ் - 96
8. இலங்கை – 92
9. வெஸ்ட் இண்டீஸ் – 71
10. ஆப்கானிஸ்தான் – 69
மேலும் படிக்க | உம்ரான் மாலிக் எதற்கு? இந்திய அணியின் முன்னாள் வீரர் சரமாரி கேள்வி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR