பும்ராவின் புயல் வேகம்..ஹிட்மேனின் அதிரடி - இந்தியாவின் சாதனை வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பும்ராவின் புயல்வேக பந்துவீச்சு மற்றும் ஹிட்மேனின் அதிரடியில் சிறப்பான வெற்றியை இந்திய அணி பதிவு செய்துள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 12, 2022, 10:21 PM IST
  • முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபாரம்
  • 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஜஸ்பிரித் பும்ரா
  • இங்கிலாந்து அணிக்கு எதிராக தொடரும் ஹிட்மேன் அதிரடி
பும்ராவின் புயல் வேகம்..ஹிட்மேனின் அதிரடி - இந்தியாவின் சாதனை வெற்றி title=

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி களமிறங்கியதும், இந்திய அணியின் வேகப்புயல் ஜஸ்பிரித் பும்ரா தன்னுடைய விக்கெட் வேட்டையை தொடங்கினார். ரன் ஏதும் எடுக்காமல் இருந்த ஜேசன் ராயை போல்டு முறையில் காலி செய்த அவர், ஜோ ரூட்டுக்கு பவுன்ஸ் வீசி வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப வைத்தார்.

கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு சவாலாக இருந்த பேரிஸ்டோவ், இந்த போட்டியிலும் சிறப்பான இன்னிங்ஸ் ஆடுவார் என எதிர்பார்த்திருந நிலையில், அவரையும் காலி செய்தார் பும்ரா. இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்மேன்கள் மூவரையும் பும்ரா ஒரு பக்கம் வரிசையாக அனுப்பிக் கொண்டிருந்த நேரத்தில், மறுமுனையில் பந்துவீச வந்த முகமது சமி, தன் பங்குக்கு பென்ஸ்டோக்ஸை அவுட்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பினார். அப்போது, இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

மேலும் படிக்க | Gujarat Fake IPL: போலி ஐபிஎல் மூலம் ரஷ்ய கும்பலுக்கு மொட்டையடித்த குஜராத் கில்லாடிகள்

டாப் ஆர்டர் நான்கு பேரில் மூவர் ரன் கணக்கையே தொடங்கவில்லை. அடுத்த தனியொரு ஆளாக களத்தில் இருந்த கேப்டன் ஜோஸ் பட்லர், தன் பங்குக்கு 30 ரன்கள் எடுத்து வெளியேற, அதிரடி வீரர் லிவிங்ஸ்டோன் 20 ஓவர் போல் விளையாட நினைத்து கிளீன் போல்டாகி வெளியேறினார். இறுதியில் மொயின் அலி 14 ரன்களும், வில்லே 21 ரன்களும் எடுக்க, இங்கிலாந்து தட்டுத் தடுமாறி 100 ரன்களை கடக்க உதவியது. முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 110 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி தரப்பில் பும்ரா 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில், ஹிட்மேன் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை கையில் எடுக்க, தவான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முடிவில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஒரு நாள் போட்டி வரலாற்றில் முதன் முறையாக இந்திய அணி, இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாதனை படைத்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் கேப்டன் ரோகித் சர்மா 58 பந்துகளில் 76 ரன்கள் விளாசினார். ஷிகர் தவான் 31 ரன்கள் எடுத்து ரோகித்துக்கு பக்கபலமாக இருந்தார்.

இந்தப் போட்டியில் 5 சிக்சர்களை விளாசிய ரோகித் சர்மா, ஒருநாள் போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறினார். மேலும், ஒருநாள் போட்டியில் 250 சிக்சர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். 6 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் படிக்க | உம்ரான் மாலிக் எதற்கு? இந்திய அணியின் முன்னாள் வீரர் சரமாரி கேள்வி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News