இந்திய அணியின் சோலியை முடிச்ச இங்கிலாந்து.... முதல் டெஸ்டில் தோல்வி - ஒல்லி போப், ஹார்டிலி அபாரம்
ஹைதராபாத்தில் நடைபெற்ற முதாலவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது. 100 ரன்களுக்கும் அதிகமாக முன்னிலை பெற்று இந்தியாவில் இந்திய அணி தோற்பது இதுவே முதல் முறையாகும்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருக்கிறது. 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் பேட்டிங் மிக மோசமாக இருந்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் சுப்மான் கில் டக் அவுட்டாக, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். வெற்றி பெற ஏதுவான ஸ்கோர் என்றாலும் பேட்ஸ்மேன்கள் மெத்தனப்போக்குடன் விளையாடியது இந்திய அணி தோல்வி அடைய முக்கிய காரணமாக அமைந்தது.
மேலும் படிக்க | ராகுல் டிராவிட் பயிற்சியாளரா வராமலே இருந்திருக்கலாம்... இத்தனை தோல்விகளா?
கேப்டன் ரோகித் சர்மா 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஜெய்ஷ்வால் 15 ரன்களில் வெளியேறினார். கே.எல். ராகுல் 22 ரன்களுக்கும், அக்சர் படேல் 17 ரன்களுக்கும் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். சிக்கலான நேரத்தில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் நிலைத்து நின்று விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரூட் பந்துவீச்சில் 13 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த ஜடேஜா 2 ரன்களுக்கு ரன் அவுட்டாக இந்தியாவின் வெற்றி வாய்ப்புக்கான நம்பிக்கை தகர்ந்தது.
இருப்பினும் பரத் மற்றும் அஸ்வின் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாட, மீண்டும் வெற்றிக்கான வாய்ப்பை இந்திய அணி ஒரு கட்டத்தில் எட்டிப்பார்த்தது. ஆனால் இங்கிலாந்து அணியின் அறிமுக பந்துவீச்சாளர் ஹார்டிலி அற்புதமாக பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்துக் கொண்டே இருந்தார். முடிவில் இந்திய அணி 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஹார்டிலி 7 விக்கெட்டுகளை சாய்த்தார். அதேபோல் பேட்டிங்கில் ஒல்லி போப் 196 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரின் பேட்டிங் இங்கிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டது.
முதல் இன்னிங்ஸ் முடிவில் இங்கிலாந்து அணி 190 ரன்கள் பின் தங்கியிருந்தது. ஒல்லி போப் விக்கெட்டை எடுத்திருந்தால் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்தது. அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை நழுவ விட்டதால் 230 ரன்கள் லீட் எடுத்து, இந்திய அணியையும் வீழ்த்தியிருக்கிறது இங்கிலாந்து அணி. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில் இந்திய அணி 100 ரன்களுக்கும் மேலாக முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று டெஸ்ட் போட்டி ஒன்றில் தோற்பது இதுவே முதன்முறையாகும்.
மேலும் படிக்க | கண்கலங்கிய பிரையன் லாரா, கூப்பர்..! வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்குப் பிறகு சுவாரஸ்யம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ