கண்கலங்கிய பிரையன் லாரா, கூப்பர்..! வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்குப் பிறகு சுவாரஸ்யம்

வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வெற்றி பெற்றவுடன், பிரையன் லாரா மற்றும் கார்ல் கூப்பர் ஆகியோர் ஆனந்த கண்ணீர் வடித்து வெற்றியை கொண்டாடினர்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 28, 2024, 03:37 PM IST
  • வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்ற வெஸ்ட் இண்டீஸ்
  • ஆஸ்திரேலிய அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
  • பிரையன் லாரா மற்றும் கூப்பர் ஆகியோர் மைதானத்தில் கண்ணீர்
கண்கலங்கிய பிரையன் லாரா, கூப்பர்..! வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்குப் பிறகு சுவாரஸ்யம் title=

வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான காபா டெஸ்ட் போட்டி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரமாக விளையாடி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய மண்ணில் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகும், ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகும் முதன்முறையாக வீழ்த்தியிருக்கிறது வெஸ்ட் இண்டீஸ். இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் இளம் வீரர் ஷமர் ஜோசப். முந்தைய நாள் ஸ்டார்க் வீசிய வேகபந்துவீச்சில் பேட்டிங் செய்யும்போது காயமடைந்த அவர், அதன்பிறகு பேட்டிங் செய்ய வரமுடியவில்லை. மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு நேரடியாக பந்துவீசுவதற்கே களம் புகுந்தார். 

ஆரம்பத்தில் இருந்து ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் துல்லியமான லைனில் பந்துவீசிய சமர் ஜோசப், அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்துக் கொண்டே இருந்தார். அவரின் பந்துவீச்சை ஆஸ்திரேலிய அணியினரால் எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் விக்கெட்டை இழந்து கொண்டே இருந்தனர். சமர் ஜோசப் பந்துவீச்சு சிறப்பாக இருப்பதை அறிந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிரெய்க் பிராத்வெயிட் தொடர்ச்சியாக 10 ஓவர்கள் வீச வைத்தார். காலில் காயம் இருந்தாலும், நான் பந்துவீசுகிறேன் என்னிடமே பந்தை கொடுங்கள் என சமர் ஜோசப், தன் கேப்டனிடம் கேட்டுள்ளார். 

மேலும் படிக்க | ஜோசப்: மரண மாஸ் பந்துவீச்சு... திக்குமுக்காடிய ஆஸ்திரேலியா - யார் இந்த இளம் புயல்..!

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஸ்பெல்லில் தொடர்ச்சியாக 10 ஓவர்கள் ஒரு வேகப்பந்து வீச்சாளர் வீசுவது என்பது அரிதினும் அரிதான ஒன்று. ஆனால், தன்னுடைய அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக இதனை செய்து காட்டியிருக்கிறார் சமர் ஜோசப். அவரின் துல்லியமான பந்துவீச்சில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணியை நிலைகுலைய வைத்து, வெஸ்ட் இண்டீஸ்அணியை வரலாற்று வெற்றிக்கும் அழைத்துச் சென்றார். போட்டிக்குப் பிறகு பேசிய ஷமர் ஜோசப், காலில் இருக்கும் காயத்தைப் பற்றி நான் துளிகூட கவலைப்படவில்லை, என்னுடைய அணி வெற்றி பெற வேண்டும் என்பதிலேயே என்னுடைய முழு கவனமும் இருந்தது என தெரிவித்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்தி வெற்றி பெற்ற அந்த தருணத்தில் கமெண்டரி பாக்ஸில் இருந்த பிரையன் லாரா, கண்ணீர் விட்டு அழுதே விட்டார். அவரை கட்டிப்பிடித்து ஆறுதலும் வாழ்த்துகளையும் தெரிவித்தார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட். அப்போது பேசிய லாரா, இந்த வெற்றி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் புத்துணர்ச்சியை கொடுக்கும் என கண்ணீர் மல்க தெரவித்தார். இதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் இருக்கும் கார்ல் கூப்பர், டிரெஸ்ஸிங் ரூமில் தேம்பி தேம்பி அழுதார். 

ஒரு காலத்தில் உலக கிரிக்கெட் அணிகள் அசைக்க முடியாத அணியாக இருந்தது வெஸ்ட் இண்டீஸ். அப்பேர்பட்ட அணி அப்போது மிகப்பெரிய சரிவில் இருக்கிறது. இவையெல்லாம் இந்த டெஸ்ட் வெற்றிக்குப் பிறகு சரியாகும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  டிவில்லியர்ஸ் உள்ளிட்ட பல்வேறு முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வேகப்புயல் ஷமர் ஜோசப்பை வாழ்த்தி மெய்சிலிர்க்க வைத்திருக்கின்றனர். 

மேலும் படிக்க | விராட் கோலியை பற்றி புகழ்ந்து பேசிய ரோஹித்! என்ன சொன்னார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News