ராகுல் டிராவிட் பயிற்சியாளரா வராமலே இருந்திருக்கலாம்... இத்தனை தோல்விகளா?

ராகுல் டிராவிட் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு பல பெரிய தொடர்களில்  இந்திய அணி மோசனமான தோல்வியை சந்தித்துள்ளது.

 

1 /8

இந்திய அணியின் பயிற்சியாளராக, ரவி சாஸ்திரிக்குப் பிறகு பொறுப்பேற்றவர் ராகுல் டிராவிட். கிரிக்கெட்டின் நிபுணத்துவங்களில் வல்லுநரான அவர் இந்திய அணியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.  

2 /8

அதற்கு முதல் காரணம் இந்திய அணியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான இளம் வீரர்களுக்கு ராகுல் டிராவிட் சிறப்பாக பயிற்சியளித்தார். அவரின் பயிற்சியின் கீழ் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.  

3 /8

அதனால் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என கிரிக்கெட் வட்டாரத்தில் அப்போது குரல்கள் அதிகரிக்க தொடங்கின.   

4 /8

அந்தநேரத்தில் ரவி சாஸ்திரி - விராட் கோலி கூட்டணியில் இந்திய அணி சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்தது. டெஸ்ட் மற்றும் ஒருநாள், 20 ஓவர் தொடர்களில் வரிசையாக சாதனைகளை படைத்துக் கொண்டிருந்தது.  

5 /8

இருப்பினும் உலக கோப்பை மற்றும் 20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி தோல்வியை தழுவியதால் அவர்களின் கூட்டணியை வெளியேற்ற வேண்டும் என விமர்சனங்கள் வந்தது. அதனடிப்படையில் உடனடியாக ராகுல் டிராவிட் பயிற்சியாளராகவும், கேப்டனாக ரோகித் சர்மாவும் நியமிக்கப்பட்டனர்.  

6 /8

ஆனால் எதிர்பார்த்த ஏதும் நடக்கவில்லை. இவர்களின் கூட்டணியில் இந்திய அணி மிகப்பெரிய தொடர்களில் வரிசையாக தோல்வியை சந்தித்தது.   

7 /8

ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் இந்திய அணி இரண்டு 20 ஓவர் உலக கோப்பைகள், 50 ஓவர் உலக கோப்பை, ஆசிய கோப்பை, வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் என பல தோல்விகளை சந்தித்திருக்கிறது. அதேபோல் இங்கிலாந்து அணிக்கு எதிரான சீரிஸ் சமன், நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்தபிறகு ஒரு டெஸ்ட் போட்டியை சமன் செய்தது.   

8 /8

இவையெல்லாம் ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா கூட்டணியின் தோல்விகளாக பார்க்கப்படுகிறது. அதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு அவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.