IND vs ENG லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியுடன் இந்திய அணி இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.  ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டி இங்கிலாந்திலுள்ள ஹெடிங்ளே, லீட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.  இந்திய அணி கடைசியாக இந்த மைதானத்தில் ஆடிய 1986 மட்டும் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.  குறிப்பாக 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்களில் வெற்றி பெற்றது இந்திய அணி.  இந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள இந்திய அணி கடும் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்து அணிக்கும் இந்த மைதானத்தில் ராசி அவ்வளவாக இல்லை.  கடைசியாக 2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆடிய டெஸ்ட்டில் 67 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி உள்ளது.  லீட்ஸ் மைதானம் பேட்டிங்கிற்க்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மழை வராமல் இருக்கும் பட்சத்தில் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் விக்கெட்டுகளை வேகமாக எடுக்க இந்திய அணிக்கு வாய்ப்புள்ளது.  இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டை தவிர மற்ற வீரர்கள் ரன்களை எடுக்க தடுமாறி வருகின்றனர்.


ALSO READ வேகத்தில் மிரட்டும் இந்திய பவுலர்கள்!


மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  2வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் 45 ரன்கள் எடுத்து இருந்தாலும் தொடர்ந்து ரன்களை அடிக்க சிரமப்பட்டு வருகிறார்கள் புஜாரா.  பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் தற்போது இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.  கே.எல் ராகுல் சிறப்பாக ஆடி வருவதால் ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக பிரித்வி ஷாவை களமிறங்குவது சந்தேகம்தான்.  இதனால் புஜாராவிற்கு பதிலாக சூரியகுமார் யாதவ் விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளது.



மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மழை வராமல் இருக்கும் பட்சத்தில் அஸ்வினை போட்டியில் எடுக்க வாய்ப்புள்ளது.  இருப்பினும் இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர்.  ஜடேஜாவும் பேட்டிங்கில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.  இரண்டு ஸ்பின்னர்கள் உடன் கோலி களம் இறங்கும் பட்சத்தில் நான்கு பவுலர்களில் ஒருவரை அணியில் இருந்து எடுக்க வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் உள்ளார் இந்திய அணி கேப்டன் விராட்கோலி.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe