3 பந்தில் 24 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்த பும்ரா!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் கடந்த 1ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்ப பந்த் மற்றும் ஜடேஜா இருவரும் கூட்டணி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். முதல் நாளில் பந்த் சதம் அடித்து அவுட் ஆனார். 100 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து தடுமாறிய இந்திய அணியை பந்த் காப்பாற்றினார். இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஜடேஜா தன் பங்கிற்கு சதம் அடித்தார். வெளிநாட்டில் ஜடேஜா அடிக்கும் முதல் சதம் இதுவாகும்.
மேலும் படிக்க | ஜடேஜா போட்ட நங்கூரம்! முதல் சதம் அடித்து அசத்தல்!
பின்பு ஜடேஜாவும் ஆண்டர்சன் பந்தில் அவுட் ஆனார். கடைசி விக்கெட்டுக்கு பும்ரா மற்றும் சிராஜ் விளையாடினர். ப்ராட் வீசிய ஓவரில் 4,4Wd,6Nb,4,4,4,6,1 என மொத்தம் 35 ரன்கள் அடித்து அசத்தினார் கேப்டன் பும்ரா. இது டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாதனையாக பார்க்கப்படுகிறது. முதல் மூன்று பந்தில் மட்டும் 24 ரன்கள் இந்த ஓவரில் கிடைத்தது. 2007ம் ஆண்டு ப்ராட் ஓவரில் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 36 ரன்கள் அடித்து இருந்தார். இந்த இரண்டையும் வைத்து ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர். முதல் இன்னிங்சில் இந்திய அணி 416 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
பின்பு களம் இறங்கிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் மிரட்டல் வேகத்தில் தடுமாறியது. இங்கிலாந்து அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களின் விக்கெட்களையும் கேப்டன் பும்ரா கைப்பற்றினார். உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனான ரூட்டின் விக்கெட்டை சிராஜ் கைப்பற்றினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 84 ரன்கள் அடித்துள்ளது. ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் களத்தில் உள்ளனர். இந்திய அணியும் இதே போல் நிலையில் இருந்து மீண்டு 416 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணியும் பதிலடி தர 3ம் நாள் ஆட்டத்தில் தயாராகி வருகிறது.
மேலும் படிக்க | சதம் அடித்த ரிஷப் பந்த்: சந்தோஷத்தில் துள்ளி குதித்த டிராவிட்டின் வீடியோ வைரல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR