இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்களை இழந்து 338 ரன்கள் அடித்து இருந்தது. ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடி சதம் விளாசி இருந்தார். இதனால் இந்திய அணி வலுவான ஸ்கோரை அடித்து இருந்தது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஜடேஜா 83 ரன்கள் அடித்து அவுட் ஆகாமல் இருந்தார்.
மேலும் படிக்க | சதம் அடித்த ரிஷப் பந்த்: சந்தோஷத்தில் துள்ளி குதித்த டிராவிட்டின் வீடியோ வைரல்!
இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில் தனது முதல் அயல்நாட்டு சதத்தை பதிவு செய்தார் ஜடேஜா. மூத்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த நிலையில் நேற்று பந்த்தை முழுவதுமாக விளையாடவிட்டு அவருக்கு கம்பெனி கொடுத்தார் ஜடேஜா. ஐபிஎல் 2022 போட்டியில் சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு பிறகு விலகினார். அவரது பேட்டிங் மீதும் பல விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இந்நிலையில் சதம் அடித்து தனது பேட்டிங்கை நிரூபித்துள்ளார்.
There comes the sword. Fantastic #Jadeja & a big contribution from him to take the total to 400
He is at the peak of his career, more to come #ENGvINDpic.twitter.com/58GmJpnywR
104 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். பிறகு களமிறங்கிய பும்ரா சிறிது நேரம் அதிரடி காட்டினார். ப்ராட் ஓவரில் 4,4Wd,6Nb,4,4,4,6,1 என மொத்தம் 35 ரன்கள் அடித்து அசத்தினார் கேப்டன் பும்ரா. முதல் இன்னிங்சில் 416 ரன்கள் அடித்த நிலையில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்களை வீழ்த்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 32 முறை 5 விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார் ஆண்டர்சன்.
#TeamIndia fans, did you enjoy that from @Jaspritbumrah93
Live - https://t.co/xOyMtKJzWm #ENGvIND pic.twitter.com/xfBZ18bdd5
— BCCI (@BCCI) July 2, 2022
மேலும் படிக்க | ’ஜார்வோ 69’ நியாபகம் இருக்கா? இந்திய அணிகாக களமிறங்கியவர் - வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR