இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.  முதல் இன்னிங்சில் இந்திய அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும் 6வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஜடேஜா மற்றும் பந்த் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.  இடது கை பேட்ஸ்மேன்களான இருவரும் சதம் அடித்து 416 என்ற இமால ரன்னை இந்திய அணியை எட்ட செய்தனர்.  இரண்டாம் நாளான நேற்று இந்திய அணி முதல் இன்னிங்சில் தனது அனைத்து விக்கெட்களையும் இழந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 3 பந்தில் 24 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்த பும்ரா!


பின்பு களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் இந்திய அணியின் வேகத்தில் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.  இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 84 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இருந்தது.  இந்நிலையில் இன்று 3ம் நாள் ஆட்டத்தில் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் பொறுப்பாக ஆடி விக்கெட்டை இழக்காமல் இருந்தனர்.  போட்டியின் இடையில் விராட் கோலி மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.  இருவரும் நெருங்கி வந்து கோபமாக வார்த்தைகளை பரிமாறி கொண்டனர்.  பின்பு நடுவர் வந்து இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.


 



விராட் கோலி இந்திய அணியின் கேப்டன் ஆகா இருந்த சமயத்தில் காட்டும் ஆக்ரோஷத்தை இந்த போட்டியில் காண்பித்து வருகிறார்.  ஸ்டோக்ஸ் அவுட் ஆனா போது மிகவும் மகிழ்ச்சியாக ஆரவாரத்தை வெளிப்படுத்தினார்.  ஜானி பேர்ஸ்டோவ்வுடன் வாக்குவாதம் நடந்த சிறிது நேரத்திற்கு பிறகு அவருடன் சிரித்து பேசி சமாதானம் ஆனார் கோலி.  தற்போது வரை இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்களை இழந்து 200 ரன்கள் அடித்துள்ளது.  


 



மேலும் படிக்க | ஜடேஜா போட்ட நங்கூரம்! முதல் சதம் அடித்து அசத்தல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR