India vs West Indies: முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணத்தில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.  ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு இந்தியா அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.  ஆசியக் கோப்பைக்கு முன்னதாக ஆகஸ்ட் 18-22 க்கு இடையில் ஜிம்பாப்வேயில் மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. இங்கிலாந்தில் டி20 மற்றும் ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.  அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | IND vs WI: டிராவிட் விரும்பினாலும் இந்த 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பில்லை


"தேர்வுக்குழு ஜிம்பாப்வேக்கு எதிரான இந்திய அணியை அறிவிக்க இன்னும் சிறிது காலம் உள்ளது. விராட் ஜிம்பாப்வே தொடரைப் பயன்படுத்தி பழைய பார்மை மீண்டும் பெற வேண்டும் என்பது திட்டம்" என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.  கோஹ்லியைத் தவிர, இந்தியாவின் பெரும்பாலான முக்கிய வீரர்கள் ஜிம்பாப்வே தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.  நாளை தொடங்கும் மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கும் ஷிகர் தவான் தொடர்ந்து கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பர்மிங்காம் டெஸ்டில் 2 இன்னிங்ஸ்களில் 31 ரன்கள், 2 டி20 போட்டிகளில் 12 ரன்கள் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் 33 ரன்கள் மட்டுமே எடுத்து, இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த அனைத்து வடிவத் தொடரில் தனது சரிவைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினார் விராட் கோலி.  தற்போது, ​​விராட் அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் 70 சதங்களைக் கொண்டுள்ளார், அவற்றில் பெரும்பாலானவை ODI போட்டிகளில் அடித்தவை.  எனவே 2022 ஆசிய கோப்பை மற்றும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக தனது சிறந்த ஆட்டத்தை மீண்டும் பெற தேர்வாளர்கள் அவருக்கு வாய்ப்பளிக்கின்றனர்.



சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜிம்பாப்வே தொடரில் தான் இந்திய அணியில் விளையாட உள்ளார் கோலி.  ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் விளையாடுவது இதுவே முதல் முறை. கடைசியாக 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக இந்தியா விளையாடியது.  மூன்று ஒருநாள் போட்டிகளும் ஹராரேயில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெற உள்ளது.


ஜிம்பாப்வேயில் இந்தியா சுற்றுப்பயணம் அட்டவணை:


ஆகஸ்ட் 18: IND vs ZIM 1வது ODI ஹராரேயில்


ஆகஸ்ட் 18: IND vs ZIM 2வது ODI ஹராரேயில்


ஆகஸ்ட் 18: IND vs ZIM 3வது ODI ஹராரேயில்


மேலும் படிக்க | ராகுல் டிராவிட்டை டான்ஸ் ஆட வைத்த ஷிகர் தவான்! வைரலாகும் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ