India vs West Indies 1st Odi: இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜூலை 22 முதல் தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு போட்டிக்கு முன்பே மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. தலைமை பயிற்சியாளர் டிராவிட் மற்றும் தவான் விரும்பினாலும் 3 வீரர்களை பிளேயிங் லெவனில் சேர்ப்பது கடினம்.
மேலும் படிக்க | முன்னா பாயாக மாறிய ரிஷப்பன்ட்! புது ஸ்டைலில் கலக்கல்
ஓப்பனிங் யார்?
வழக்கம்போல் ஷிகர் தவான் இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவார். ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருப்பதால், தவானுடன் களமிறங்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இஷான் கிஷன், சுப்மான் கில் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் அணியில் உள்ளனர். 3 பேரும் ஓப்பனிங் விளையாடுபவர்கள் என்பதால், அவர்களில் யாருக்கு அந்த வாய்ப்பு கிட்டும் என தெரியவில்லை. ருதுராஜ் கெய்க்வாட் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துவதில்லை என்பதால், மற்ற இருவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படலாம்.
பிரசித் கிருஷ்ணா
இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். இந்த தொடர் அவருக்கு சிறப்பாக அமையவில்லை என்றே கூறலாம். 3 போட்டிகளிலும் சேர்த்து வெறும் விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியிருந்தார். அதனால் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் இவரை பிளேயிங் லெவனில் சேர்க்காவிட்டாலும் வியப்பதற்கில்லை.
காயத்தால் சந்தேகம்
இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் வெளியே உட்கார வேண்டியிருக்கலாம். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது அர்ஷ்தீப் சிங் காயம் அடைந்ததால் முதல் போட்டியில் அவர் களமிறங்கமாட்டார். அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக ஷர்துல் தாக்கூர், அவேஷ் கான், முகமது சிராஜ் ஆகியோரில் யாரேனும் ஒருவர் களமிறங்க வாய்ப்புகள் உள்ளன.
மேலும் படிக்க | ராகுல் டிராவிட்டை டான்ஸ் ஆட வைத்த ஷிகர் தவான்! வைரலாகும் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ