சௌத் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டிக்கு பிறகு இந்திய அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.  அதற்கு முன்பு அயர்லாந்து நாட்டிற்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.  இதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.  தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் இந்திய அணி களமிறங்கியது.  பந்த் தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி தற்போது 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | Team India IND vs SA: டிராவிட் கொடுத்த அட்வைஸ் - வெற்றிப்பாதைக்கு திரும்பிய இந்தியா


ஐபிஎல் 2022 போட்டியில் குஜராத் அணியின் கேப்டனாக இருந்து அணியை கோப்பையை வெற்றி பெற செய்த ஹர்திக் பாண்டியா தற்போது அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.  காயத்தில் இருந்து மீண்டு தற்போது பேட்டிங் மற்றும் பீல்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.  ஜூன் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இந்திய அணி அயர்லாந்து நாட்டில் விளையாட உள்ளது.  இந்த அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


இந்திய அணி:


ஹர்திக் பாண்டியா (C), புவனேஷ்வர் குமார் (WC), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (WK), யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஆர் பிஷ்னோய், ஹர்ஷல் படேல் , அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்


 



மேலும் படிக்க | ஆசிய கோப்பை 2022: போட்டி அட்டவணை மற்றும் இடங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR