ஆசிய கோப்பை 2022: போட்டி அட்டவணை மற்றும் இடங்கள்!

ஆசிய கோப்பையை இதுவரை இந்தியா 7 முறையும்,இலங்கை 5 முறை வெற்றி பெற்றுள்ளது.   

Written by - RK Spark | Last Updated : Jun 15, 2022, 01:13 PM IST
  • இது ஆசிய கோப்பை போட்டியின் 15வது பதிப்பாகும்.
  • இந்தியா 7 முறை ஆசிய கோப்பையை வென்றுள்ளது.
  • இந்த ஆண்டு போட்டியை இலங்கை நடத்துகிறது.
ஆசிய கோப்பை 2022: போட்டி அட்டவணை மற்றும் இடங்கள்! title=

2022 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது.  கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு ஆசிய கோப்பை 2022 போட்டிகள் நடைபெறுகிறது.  ஆசிய கோப்பை 2022ல் 6 ஆசிய அணிகள் விளையாடுகின்றன.  இந்த ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் போட்டிகள் நடைபெறும்.  இலங்கை அணி இந்த ஆண்டு ஆசிய கோப்பையை நடத்துகிறது.  ஆசிய கோப்பையின் 2020 பதிப்பை இலங்கை நடத்த வேண்டும், ஆனால் கோவிட் தொற்றுநோய் காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டு தற்போது 2022-ல் நடைபெற உள்ளது.  இது ஆசிய கோப்பை போட்டியின் 15வது பதிப்பாகும்.

asiacup

மேலும் படிக்க | இந்திய அணியின் பயிற்சியாளரான VVS லக்ஷ்மண்!

 

இதுவரை இந்தியா 7 முறை ஆசிய கோப்பையை வென்றுள்ளது, இலங்கை 5 முறை வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் கடைசி பதிப்பு 2018-ல் T20 வடிவத்தில் விளையாடப்பட்டது. இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. எனவே, 2022 ஆசிய கோப்பையின் நடப்பு சாம்பியனாக இந்தியா உள்ளது.  ஆசிய கோப்பை 2022க்கான சரியான அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும், போட்டி ஆகஸ்ட் 27 ஆம் தேதி தொடக்க ஆட்டத்துடன் தொடங்க உள்ளது. இறுதிப் போட்டி செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறும், மொத்தம் 13 போட்டிகள் நடைபெற உள்ளன.

ஆசிய கோப்பை 2022ல் 6 அணிகள் பங்கேற்கின்றன. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய ஐந்து அணிகள் போட்டியின் ஒரு பகுதியாக இருக்கும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தகுதிச் சுற்றுக்குப் பிறகு மேலும் ஒரு அணி போட்டியில் இணையும்.  தகுதிச் சுற்றில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய 4 அணிகள் மோதுகின்றன. அனைத்து அணிகளும் போட்டிக்கான தங்கள் அணியை இன்னும் அறிவிக்கவில்லை. 2022 ஆசியக் கோப்பையின் அனைத்து அணிகளும் ஏற்கனவே இருதரப்பு போட்டிகளில் பிஸியாக உள்ளன. எனவே, ஆகஸ்ட் மாதம் போட்டிக்கு முன்னதாக அவர்கள் அணிகளை அறிவிப்பார்கள். 

போட்டியை இலங்கை நடத்தவுள்ளதால், கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானம், பல்லேகலவில் உள்ள பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம், காலி சர்வதேச மைதானம், தம்புள்ளை சர்வதேச மைதானம் மற்றும் மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானம் போன்ற மைதானங்கள் இடம்பெறும். 

மேலும் படிக்க | ஐபிஎல் 2023; மீண்டும் வருகிறதா சாம்பியன்ஸ் லீக்? ஜெய்ஷா சூசகம்

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News