IPL 2020 Match 30: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி கேபிடல்ஸ்
IPL 2020 போட்டித்தொடரின் 30வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வெற்றி கொண்டது.
IPL 2020 போட்டித்தொடரின் 30வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வெற்றி கொண்டது.
IPL 2020 போட்டித்தொடரின் 30வது போட்டி, துபாய் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களம் இறங்கியது.
அணியின் தொடக்க ஆட்டக்கரார்களாக பிரித்வி ஷாவும், ஷிகர் தவனும் களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் பந்திலேயே கிளீன் போல்டு ஆகி வெளியேறினார் பிரித்வி ஷா.
டெல்லி கேபிடல்ஸ் அணியில், பிருத்வி ஷா, ஷிகர் தவன், அஜிங்க்யா ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), மார்கஸ் ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கேரி, அக்சார் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், துஷார் தேஷ்பாண்டே, ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்க்கியா ஆகியோர் களம் இறங்கினார்கள்.
Also Read | IPL 2020: நடப்பு IPL சீசனிலிருந்து விலகிய இஷாந்த் ஷர்மா... காரணம் என்ன தெரியுமா?
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. அதையடுத்து 162 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), சஞ்சு சாம்சன், ராபின் உத்தப்பா, ரியான் பராக், ராகுல் தேவாத்தியா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால், ஜெய்தேவ் உனட்கட், கார்த்திக் தியாகி விளையாடினார்கள்.
ஆட்டத்தின் 14 ஓவரில் அக்சர் வீசிய பந்தில் அவுட்டானார் பராக். ராபின் உத்தப்பாவின் தவறினால் எதிர் முனையில் இருந்த ரியான் பராக் ரன் அவுட்டானார்.
இறுதியில் 148/8 என்ற ஸ்கோரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்து,13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப்போனது.
முக்கியமான இரு விக்கெட்டுகளை வீழ்த்திய அன்ரிச் நார்ட்ஜே (Anrich Nortje) ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இன்று அவரின் பந்து புயல் வேகத்தில் பறந்தது.
எவ்வளவு வேகமாக பந்து வீசினீர்கள் என்று தெரியுமா என கேட்டதற்கு தனக்குத் தெரியாது என்று புன்னகைக்கிறார் நார்ட்ஜே. கூறுகிறார். லீக் போட்டிகளில் இன்றைய போட்டி சிறந்த அனுபவமாக இருந்தது என்று அவர் கூறுகிறார்.
Read Also | IPL 2020: ‘திரும்பி வா சின்ன தல’ Suresh Raina-ஐ அழைக்கும் CSK fans!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR