புதுடெல்லி: IPL மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 அணியில் இடம் பிடித்த யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் பந்து வீச்சாளர் டி நடராஜன், எம்.எஸ். தோனியை தனது வெற்றிக்கான ஒரு முக்கிய காரணமாகக் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எம்.எஸ். தோனி (MS Dhoni) அளித்த ஒரு டிப்ஸ் தனக்கு மிகவும் உதவியதாக நடராஜன் தெரிவித்துள்ளார். கடந்த ஐ.பி.எல் தொடரில் டி.நடராஜன் மிகவும் சிறப்பாக விளையாடினார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதைத் தொடர்ந்து நடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அவர் டெஸ்ட், ஒருநாள், டி-20 என மூன்று வகை போட்டிகளிலும் அறிமுகமாகி தன் திறமையைக் காட்டினார். 


நடராஜனுக்கு தோனி இந்த பெரிய ஆலோசனையை வழங்கினார்


கடந்த ஆண்டு IPL-ன் போது, ​​முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி, மெதுவான பவுன்சர்கள் மற்றும் கட்டர்களை போடுமாறு தனக்கு அறிவுறை வழங்கியதாக நடராஜன் தெரிவித்தார். இதன் மூலம் தனது திறமையை அதிகப்படுத்திக்கொள்ள தனக்கு வாய்ப்பு கிடைத்ததாக அவர் தெரிவித்தார். வேகப்பந்து வீச்சாளரான நடராஜன், கடந்த IPL-ல் அதிகப்படியாக 71 யார்க்கர்களை வீசினார். மேலும், தோனி, டெவிலியர்ஸ் போன்ற பெரிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளையும் அவர் எடுத்தார். 


ALSO READ: IPL 2021: சின்ன தல சுரேஷ் ரெய்னா சீறிப்பாய்ந்தால், CSK-வை யாராலும் நிறுத்த முடியாது: Aakash Chopra


நடராஜன் தோனியைப் பாராட்டினார்


"தோனியைப் போன்ற ஒரு வீரருடன் பேசுவதே ஒரு பெரிய விஷயமாகும். அவர் ஃபிட்னஸ் பற்றி என்னிடம் பேசினார். என்னை உற்சாகப்படுத்திய அவர், அனுபவத்துடன் நான் எனது திறமையை இன்னும் வளர்த்துக் கொள்வேன் என்றும் கூறினார். மெதுவான பவுன்சர்கள், கட்டர்கள் மற்றும் இதுபோன்ற மாறுபாடுகளைப் பயன்படுத்தவும் அவர் எனக்கு அறிவுறை வழங்கினார். அவை எனக்கு மிகவும் பயனுள்ளவையாக இருந்தன” என்று நடராஜன் (T Natarajan) கூறியதாக ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்ஃபோ கூறியது. 


நடராஜன் தோனியின் விக்கெட்டை எடுத்தார் 


கடந்த ஆண்டு IPL போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தோனியின் விக்கெட்டை வீழ்த்தினார். IPL-ல் அவரது அபார ஆட்டத்தின் காரணத்தால், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்காக இந்திய அணியில் ரிசர்வ் வீரராக சேர்க்கப்பட்டார். தான் எடுத்த தோனியின் விக்கெட்டை நினைவு கூர்ந்த நடராஜன், "நான் போட்ட பந்தில் அவர் 102 மீட்டருக்கான ஒரு பெரிய சிக்சரை அடித்தார். அடுத்த பந்தில் நான் அவரது விக்கெட்டை எடுத்தேன். ஆனால் அதை நான் கொண்டாடவில்லை. நான் அவர் சிக்சர் அடித்த பந்தைப் பற்றிதான் யோசித்துக்கொண்டிருந்தே” என்றார் டி. நடராஜன்.


ALSO READ: IPL 2021: மும்பை வாங்க்டே ஸ்டேடியத்தில் எட்டு பேருக்கு COVID-19 பாதிப்பு


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR