குஜராத் டைட்டன்ஸ் அணி தனது கடைசி போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக நுழைந்தது. இந்தப் போட்டியில் சுழற்பந்துவீச்சாளர் ரஷித்கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி லக்னோ அணியின் தோல்வியை உறுதி செய்தார். அவரின் சிறப்பான பந்துவீச்சு மூலம் உலக சாதனை ஒன்று தேடி வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரஷித்கான் சாதனை


ஆப்கானிஸ்தானின் 23 வயதான லெக் ஸ்பின்னர் ரஷீத் கான் தனது அதிரடி ஆட்டத்தின் அடிப்படையில் டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை படைத்துள்ளார். அதாவது, டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை ரஷித் கான் பெற்றுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் வீரரை சுனில் நரைனை 4வது இடத்துக்கு தள்ளியுள்ளார். 


மேலும் படிக்க | ராஜஸ்தானை எதிர்கொள்ளும் டெல்லி... பண்ட்டுக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்


தேடி வந்த சாதனை


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் இந்த கவுரம் ரஷித்கானுக்கு தேடி வந்தது. அந்தப் போட்டியில் 3.5 ஓவர்கள் வீசிய அவர் 24 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்தார் ரஷித் கான். 


டுவைன் பிராவோ முதல் இடம்


டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை மேற்கிந்திய தீவுகளின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ வைத்துள்ளார். இதுவரை டி20 கிரிக்கெட்டில் 587 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அவர். அவருக்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் இம்ரான் தாஹிர் 451 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளார். ஆப்கானிஸ்தானின் 23 வயதான லெக் ஸ்பின்னர் ரஷித் கான் 450 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.


மேலும் படிக்க | மீண்டும் 'RCB'க்குத் திரும்பும் மிஸ்டர்-360? - ரகசியத்தை உடைத்தார் விராட் கோலி!


டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள்


1. டுவைன் பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்) - 587 விக்கெட்டுகள்
2. இம்ரான் தாஹிர் (தென்னாப்பிரிக்கா) - 451 விக்கெட்டுகள்
3. ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) - 450 விக்கெட்டுகள்
4. சுனில் நரைன் (வெஸ்ட் இண்டீஸ்) - 437 விக்கெட்டுகள்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR